Breaking News

விஜயபிராபகரன் VS ராதிகா: அங்கப்பிரதக்ஷனம் எல்லாம் வேஸ்ட்!! விருதுநகரில் முன்னிலை வகிக்கும் தேமுதிக!!

Vijayaprabakaran VS Radhika: Angapradakshanam is all waste!! Demuthika leading in Virudhu Nagar!!

விஜயபிராபகரன் VS ராதிகா: அங்கப்பிரதக்ஷனம் எல்லாம் வேஸ்ட்!! விருதுநகரில் முன்னிலை வகிக்கும் தேமுதிக!!

நாடாளுமன்ற தேர்தலானது 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்ததை அடுத்து இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.குறிப்பாக தமிழகத்தில் பாஜக இந்த முறையாவது காங்கிரஸ் -வுடன் போட்டியிட்டு முன்னிலை வகிக்குமா என்று பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.அந்த வகையில் பாஜக மற்றும் பாமக கூட்டணியில் தர்மபுரி மாவட்டத்தில் சௌமியா அன்புமணி அவர்கள் ஒரு முன்னனி வகித்து வருகிறார்.

இதனிடையே விருதுநகர் மாவட்டத்தில் போட்டியிட்ட ராதிகா வெற்றி வாகை சூடுவாரா என்று பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது.நேற்று ராதிகா வெற்றியடைய வேண்டும் என்று அவரது கணவர் சரத்குமார் அங்கப்பிரதக்ஷனம் செய்தது குறிப்பிடத்தக்கது.அதுமட்டுமின்றி கடந்த ஞாயிற்றுக்கிழமை ராதிகா அவர்கள் ஆண்டாள் கோவிலுக்கு சென்று வெற்றி பெற வேண்டும் என்று வழிபட்டும் வந்தார்.

ஆனால் இவை எதுவும் அவருக்கு கை கொடுக்கவில்லை.விருதுநகர் மாவட்டத்தில் ராதிகா பின்னடைவையே சந்தித்துள்ளார்.இவருக்கு எதிராக போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் மற்றும் அதிமுக கூட்டணியில் நின்ற தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் இடையே போட்டி நிலவி வருகிறது.தற்போதைய எண்ணிக்கையில் அந்த தொகுதியில் விஜய பிரபாகரன் முன்னனி வகித்து வருகிறார்.