விஜயகாந்த் மருத்துவமனையில் திடீர் அனுமதி! அதிர்ச்சியில் கட்சி தலைமை!
கொரோனா தொற்றானது கடந்த ஓராண்டாகவே பல கோடி மக்களை காவு வாங்கிவருகிறது.மக்கள் அதிலிருந்து மீளுவதற்கு பெருமளவு முயற்சித்து வருகின்றனர்.இந்த கொரோனா தொற்று பரவலுக்கு முக்கிய காரணம் சட்டமன்ற தேர்தல் என்றும் பலர் விமர்சித்தும் வருகின்றனர்.அந்தவகையில் நடிகர் மற்றும் தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு சில காலமாகவே உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில் தொண்டையில் சிறு பிரச்சனை ஏற்பட்டு அவருக்கு பேச முடியாமல் போனதில் சிங்கப்பூரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.அதனைத்தொடர்ந்து தற்போது சட்டமன்ற தேர்தல் நடந்த போதிலும் அவரது மகன் மட்டுமே பெருமளவு கட்சியின் மேல் கவனம் செலுத்தி வந்தார்.இவர் அதிக பிரச்சார கூட்டங்களில் ஏதும் கலந்துக்கொள்ள வில்லை.
அதனையடுத்து திமுக சட்டமன்ற தேர்தலில் திமுக வென்ற போது கூட திமுக இளைஞரணி செயலாளர் ஸ்டாலின்,விஜயகாந்தை நேரில் சந்தித்தார்.அப்போது அவர் உடல்நலம் மிகவும் சிறப்பாக காணப்பட்டது.அதனைத்தொடர்ந்து இன்று அதிகாலை 3 மணியளவில் விஜயகாந்திற்கு உடல்நலக் குறைவு காணப்பட்டுள்ளது.அதனால் அவரை சென்னையிலுள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தற்போது அவரது உடல்நலம் குறித்து எந்தவித தகவலும் தெரிக்கப்படவில்லை.அவரை மருத்துவமனையில் அனுமதித்ததில் கட்சி தலைமை பெருமளவு சோகத்தில் காணப்படுகிறது.