முதுகை காட்டிய அஜித்! கண் கலங்கிய விஜயகாந்த்!

0
267
#image_title

 

 

விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருக்கும் பொழுது நடிகர் சங்கம் மிகவும் கடனில் இருந்தது. அந்த கடனை அடைப்பதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்த பொழுது ஒரு நட்சத்திர விழா நடத்தி பணம் திரட்டலாம் என்று யோசித்துள்ளார் விஜயகாந்த்.

 

அதில் அனைத்து திரை உலகினரையும் ரஜினி, கமல், விஜய் அஜித் உள்ளிட்ட அனைவரையும் வரவேண்டும் என்று விஜயகாந்த் சொல்லி நட்சத்திர திருவிழா நடந்தது.

 

எப்பவும் போலே அஜித் இதில் பங்கு கொள்ளவில்லை. இதனால் மிகவும் கோபத்தில் இருந்தாராம் விஜயகாந்த்.

 

நட்சத்திர விழா முடிந்த நினைத்தது போல் நல்ல வருமானம் கிடைத்துள்ளது. இதனால் மிகவும் சந்தோஷம் உற்ற விஜயகாந்த் நடிகர் சங்க கடனை கட்டியுள்ளார்.

 

இதன்பின், நடிகர் விஜயகாந்தை நேரில் சந்தித்து நடிகர் சங்கத்திற்கு தன்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்ன விஜயகாந்தின் வீட்டிற்கு புறப்படுகிறார் அஜித்.

 

நட்சத்திர விழாவிற்கு அஜித் வராததால் கடும் கோபத்தில் இருந்த விஜயகாந்த், அஜித் கொடுத்த பணத்தை முதலில் வாங்கவில்லை. ‘ஒன்னோட காசு எனக்கு வேண்டாம். நாங்க நினைத்ததை விட அதிகமாக கிடைத்துவிட்டது’ என கூறி அஜித் கொடுத்த காசை மறுத்துள்ளார் கேப்டன்.

 

அஜித் எவ்வளவோ காரணங்கள் சொல்லியும் விஜயகாந்த் மனம் இறங்க வில்லை. இதனால் விஜயகாந்திடம் தனது முதுகில் இருக்கும் காயங்களை காட்டி இதுதான் காரணம் என கூறியுள்ளார் அஜித்.

 

அவருடைய முதுகில் செய்யப்பட்ட ஆபரேஷன், அதனால் அவருக்கு ஏற்பட்டுள்ள வலியின் காரணமாக தான் நட்சத்திர விழாவிற்கு வரமுடியவில்லை என தெரிந்ததும் கேப்டன் விஜயகாந்த் கண்ணீர்விட்டு அழுதுவிட்டாராம். இதன்பின் அஜித் கொடுத்த அந்த பணத்தை மனசார ஏற்றுக்கொண்டாராம் கேப்டன்.

Previous articleசேலம் மாவட்டம்: பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து!! பயணிகள் கடும் அவதி!!
Next articleஎந்த ராசிக்காரர் எந்த எண்ணை பயன்படுத்தினால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்..!