யாருக்கும் அடங்காத விஜயகாந்த்.. ஆனா இவர பார்த்தா மட்டும் கொஞ்சம் பயம்!!

Photo of author

By Gayathri

யாருக்கும் அடங்காத விஜயகாந்த்.. ஆனா இவர பார்த்தா மட்டும் கொஞ்சம் பயம்!!

Gayathri

சினிமா துறையில் ஆகட்டும் அரசியல் துறையிலாகட்டும் யாருக்கும் எதற்காகவும் அடிபணிந்து போகாத ஒருவராக திகழ்ந்தவர் நடிகர் விஜயகாந்த். தான் நடித்த மொத்த படங்களில் பாதிக்கு பாதி சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்தவர் மட்டுமல்லாத பலரை இந்த திரையுலகில் வளர்த்து விட்டவர் இவர் ஆவார். 

 

திரையுலகம் முழுவதும் விஜயகாந்த் பார்த்து பயத்தோடும் மரியாதையோடும் வணங்கிய காலத்தில் அந்த விஜயகாந்த் அவர்களை ஒருவரை பார்த்து பயத்தோடும் மரியாதையோடும் வணங்கி நின்றார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா. ஆனால் உண்மை இதுதான். விஜயகாந்தினுடைய அனைத்து முடிவுகளையும் முடிவு செய்யக்கூடியவராக மட்டுமல்லாது அவர் சொல்லும் படங்களில் மட்டுமே விஜயகாந்த் அவர் சொன்னபடி நடிக்கக்கூடிய ஆளாகவும் இருந்திருக்கிறார். இவ்வாறு நடிகர் விஜயகாந்த் அவர்களை அடக்கி ஆண்ட ஒருவர் என்றால் இப்ராஹிம் ராவுத்தர் அவர்.

 

விஜயகாந்த் அவர்களுக்கு வரக்கூடிய திரைப்படங்களின் கதைகளை இப்ராகிம் ராவுத்தர் கேட்டு கதை நன்றாக இருந்தால் விஜயகாந்த் நடிப்பார் என்று ஒப்புதல் கூறி அனுப்பி வைப்பாராம். அதன் பின் விஜயகாந்த் இடம் சென்று கதையைக் கேள் நடிக்கலாம் என்று மட்டும் கூறி விடுவாராம். ஒருவர் கதையைக் கேட்டு உனக்கு பிடித்திருந்தால் நடிக்கலாம் என்ற வாய்ப்பு தராமல் கதையைக் கேள் நடிக்கலாம் என சொல்வது கதை நன்றாக இருக்கிறது அதற்கு நான் ஒப்புதல் வழங்கி விட்டேன் நீ நடித்து தீர வேண்டும் என்பது போல் தெரிவிக்கக்கூடிய விஷயமாகும். ஆனால் இது போன்ற வார்த்தைகளுக்கு எந்த வித எதிர்ப்புமின்றி ஒப்புதல் கொடுக்கப்பட்டது என்றால் உடனடியாக நான் நடிக்கிறேன் என விஜயகாந்த் அவர்களும் கூறி விடுவாராம்.

 

ஒருமுறை, விஜயகாந்த் அவர்கள் தயாரிப்பாளரிடம் சென்று தன்னுடைய படத்திற்கு புதுமுக நடிகையை அறிமுகப்படுத்தும் படி கேட்டு இருக்கிறார். அந்த தயாரிப்பாளர் உடனடியாக இதை இப்ராகிம் ராவுத்தரிடம் தெரிவிக்க அவர், ” அவனுக்கு என்ன தெரியும் நீங்கள் எப்பொழுதும் போல் நடிகையை தேர்வு செய்யுங்கள் என்றும் அவனால் தான் படம் ஓடுகிறது எனவே புதுமுக நடிகைகள் தேவை இல்லை ” என சொல்லி இருக்கிறார். இதனைக் கேட்ட விஜயகாந் அவர் சொல்லிவிட்டார் என்றால் சரி என எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லையாம்.