தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தீபாவளி பிறகு கட்சியின் செயற்குழு கூட்டத்தை நடத்தி அடுத்த கட்ட பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இதில், கட்சி பொதுச்செயலாளர் ஆனந்திடம் மாவட்ட வாரியாக கள நிலவரம் ஆய்வு செய்யவும் உத்தரவு வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதன் காரணமாக, கட்சி நிர்வாகிகள் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
100 முதல் 130 மாவட்ட செயலாளர்களை நியமிக்க கட்சி தலைமை முடிவு செய்துள்ள நிலையில், இதுவரை நியமிக்கப்படாமல் இருப்பதால், விஜய் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக புஸ்ஸி ஆனந்திடம் தனது அதிப்ருதியை வெளிப்படுத்தியிருக்கிறார்
மேலும், ஜனவரி இறுதிக்குள் கட்சியின் உள்கட்டமைப்பு பணிகளை முடித்து, மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், மார்ச் மாதம் முதல் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் முதல் மாநாட்டின் போதே விஜய் விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என கூறிப்பட்டது. அந்த வகையில், மார்ச் மாதம் முதல் விஜய் பயணம் மேற்கொள்ள உள்ளதால், அதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சுற்றுப்பயணம் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தீவிர தயாரிப்புகளின் பகுதியாக இருக்கக்கூடும்.