20 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸ் செய்யப்பட்ட விஜய்யின் படம்..!! முதல் நாள் வசூல் தெரிந்தால் ஆடி போயிடுவீங்க..!!

0
203
Vijay's film re-released after 20 years!! If you know the collection on the first day, go for it!!
Vijay's film re-released after 20 years!! If you know the collection on the first day, go for it!!

20 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸ் செய்யப்பட்ட விஜய்யின் படம்..!! முதல் நாள் வசூல் தெரிந்தால் ஆடி போயிடுவீங்க..!!

தமிழ் திரையுலகின் முன்னணி மாஸ் ஹீரோவாக திகழும் விஜய் அவர்கள் தற்பொழுது கோட் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.இதனிடையே ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் கட்சி தொடங்கி கட்சி பணிகளிலும் பிஸியாக உள்ளார்.

கோட் படத்திற்கு பிறகு இன்னும் ஒரு படத்தில் தான் நடிப்பேன் என்ற விஜய்யின் அறிவிப்பால் அவரது ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர்.முழு நேர அரசியல்வாதியாக மக்கள் பணி செய்வதற்காக தான் சினிமாவில் இருந்து விஜய் விலகுகிறார் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் விஜய்யின் கடைசி படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி கொண்டிருக்கிறது.ஆனால் எந்த ஒரு தகவலும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.இதனால் விஜய்யின் கடைசி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அவரது ரசிகளிடையே கூடி கொண்டே செல்கிறது.

மேலும் கோட் படம் விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகும் என்று படக்குழு ஏற்கனவே அறிவித்து இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக விஜய்யின் நடிப்பில் 20 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்ட படம் ஒன்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வசூலை வாரி குவித்து வருகிறது.

கடந்த 2004 இல் விஜய்,த்ரிஷா,பிரகாஷ் ராஜ் என்று நட்சத்திர பட்டாளமே நடித்து வெளிவந்த படம் கில்லி.இந்த படம் ஒக்கடு என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும்.

ரூ. 8 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கில்லி ரூ.50 கோடி வசூல் செய்து பிளாக் பஸ்டர் படமாக கொண்டாடப்பட்டது.இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த சனிக்கிழமை(ஏப்ரல் 20) அன்று கில்லி படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.

விஜயின் புது படத்திற்கு கிடைக்கும் அதே வரவேற்பு கில்லி படத்திற்கு கிடைத்து.உலகளவில் ஒரே நாளில் ரூ.10.5 கோடி வசூலை வாரி குவித்து இருக்கிறது.தனது படம் ரீ ரிலீஸ் ஆனாலும் அதிலும் நான் தான் கோலிவுட்டின் வசூல் மன்னன் என்பதை விஜய் அவர்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleநடிகைகளை ஐட்டம் என்று அழைப்பது சரியா..?? கோபத்தில் கொந்தளித்த பிரபல இயக்குனர்..!!
Next articleவெறும் 3:43 நிமிடத்திற்கு ரூ.5 கோடி சம்பளம் வாங்கிய நடிகை..!! இதில் தான் அதிக வருமானம் வருகிறதாம்..!!