வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி விஜயின் அரசியல் பயணம் தொடர்ந்து நகர்ந்து வருகிறது. தமிழகத்தில் 120 மாவட்ட செயலாளர்களை நியமிக்க வேண்டும் என்ற நடவடிக்கைகளில் இதுவரை 95 மாவட்ட செயலாளர்களை வெற்றிகரமாக நியமித்து உள்ளார். சமீபத்தில் தேர்தல் வியூகத்தை பீகாரைச் சேர்ந்த அரசியல் வல்லுநர் பிரசாந்த் கிஷோருடன் இரு முறை ஆலோசனை நடத்தியுள்ளார். கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அந்த ஆலோசனையின் மூலம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தலைவர் விஜய் அரசியலிலும், தனது கடைசி படத்திலும் முழு முனைப்போடு கவனம் செலுத்தி வருகிறார். மார்ச் மாதம் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் போவதாக தகவல் வெளியாகி இருந்தது. பிரசாந்த் கிஷோர் அவர்களின் அறிவுரையின்படி, சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கு கட்சி உள்கட்டமைப்பு ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும். எனவே தவெக மூத்த உறுப்பினர்கள் இணைந்து தற்சமயம் பூத் செயலாளர்கள் நியமனத்தில் கவனம் செலுத்தி வருகிறார்கள். பூத் செயலர்கள் மூலம்தான் தேர்தல் விகித பணிகளை விரைவாக அனைத்து இடத்திலும் செயல்படுத்த முடியும் என்ற முனைப்போடு தற்சமயம் 68,321 பூத் செயலாளர்கள் நியமிக்க திட்டமிட்டு வருகின்றனர். மேலும், பூத் செயலர்களுக்கான ஆட்கள் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.