விஜய்யின் மாஸ்டர் பிளான்.. திமுக வுக்கு பெரிய ஆப்பு.. இத சுத்தமா எதிர்பாக்கல “ஸ்டாலின்”!! 

Photo of author

By Rupa

 

 

விஜய்யின் மாஸ்டர் பிளான்.. திமுக வுக்கு பெரிய ஆப்பு.. இத சுத்தமா எதிர்பாக்கல “ஸ்டாலின்”!!

நடிகர் மற்றும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரான விஜய் அவர்கள் கடந்த ஆண்டு முதல் கல்வி விருது வழங்கும் விழாவை நடத்தி வருகிறார்.இதில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் மூன்று இடத்தைப் பெற்ற மாணவர் மற்றும் மாணவிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை மற்றும் விருது வழங்கப்படுகிறது.இது அவர்களின் அடுத்த கட்ட உயர் கல்விக்கு உதவும் என்று கூறுகின்றனர்.

சினிமாவை விட்டு அரசியலில் இறங்கப் போவதாக விஜய் அறிவித்த நாளிலிருந்து யாருடன் கூட்டணி? எப்படி இவரது நடவடிக்கைகள் இருக்கும் என்பது குறித்து பலரது கேள்வியாக உள்ளது.அந்த வகையில் நடிகர் விஜய் தற்பொழுது சமூக வலைத்தளத்தில் முழு ஈடுபாடு காட்டி வருகிறார்.

முக்கியமான அரசியல் சார்ந்த நிகழ்வுகளுக்கு தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.ஆரம்பகட்டத்தில் வாழ்த்துகளையே கூறி வந்த சமூக வலைத்தளத்தில் தற்பொழுது எதிர்ப்புகளையும் சொல்ல ஆரம்பித்துள்ளார்.முதலாவதாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் திமுகவை எதிர்த்து தனது கருத்தை கூறியுள்ளார்.மேற்கொண்டு மத்தியில் உள்ள ஆளும் கட்சி எதிர்க்கட்சி இருவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இருக்கும் இவரின் நிலைப்பாடானது கணிக்க முடியாமல் குழப்ப நிலையில் தான் உள்ளது.இச்சமயத்தில் தான் விருது வழங்கும் விழாவில் முதல் நாள் நடந்த பொழுது தலைவர்கள் சரியில்லை என்றும் போதைப்பொருள் ஊடுருவல் குறித்தும் கடுமையாக சாடி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.அச்சமயத்தில் இவர் திமுகவிற்கு முழுமையாக கருப்புக்கொடி காட்டுகிறார் என்று பலரும் கூறி வந்தனர்.

ஆனால் இரண்டாவது நாள் விருது வழங்கும் விழாவில் நீட் எதிர்ப்பு குறித்து பேசினார். தற்சமயத்தில் இவர் திமுகவிற்கு ஆதரவு தெரிவிக்கிறாரா என்ற கேள்வி எழுந்தது.ஆனால் நாம் ஆரம்ப கட்டத்திலிருந்து நடந்ததை உற்று நோக்கினால் முழு எதிர்ப்பும் திமுகவை சாடிதான் என்பதை புரிந்து கொள்ள முடியும்.அதாவது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்தது முதல் அதற்கு முன் இவருக்கு வந்த பிறந்தநாள் அன்று விழாவில் ஒட்டுமொத்த கட்சிகளும் வாழ்த்து தெரிவித்த பொழுது ஆளும் திமுக மட்டும் தனது சார்பாக எதையும் குறிப்பிடவில்லை.

அதேபோல விஜய் அவர்களும் தனது அதிகாரப்பூர்வ தளத்தில் திமுக- விற்கு எந்த ஒரு நன்றியையும் தனது அறிக்கையில் குறிப்பிடவில்லை.இதை வைத்து திமுக மற்றும் தவெக இடையே கருத்து வேறுபாடு உள்ளது தெரிய வருகிறது.அது மட்டுமின்றி திமுக இடதுசாரி என்றும் பெரியாரிஸ்ட் என்ற நாத்திகவாதி என கூறிவரும் நிலையில் இதனையெல்லாம் தனக்கு சாதகமாக பயன்படுத்தி திமுகவின் வாக்கு வங்கியை தன் பக்கம் இழுக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றனர்.

அந்த வகையில் வலதுசாரி இடதுசாரி என்ற பிரச்சனை இன்றியும் நீட் தேர்வு விவகாரம் குறித்தும் மதுவிலக்கு பூரணாமல் போன்ற திமுகவின் நெகட்டிவ் மற்றும் பாசிடிவியில் இருக்கும் அனைத்து தரப்பு வாதத்தையும் தான் வைத்து மக்களின் கவனத்தை மற்றும் வாக்கு வங்கியை தன் பக்கம் இழுக்க முயற்சிப்பதாக கூறுகின்றனர். அதன் முதல் கட்ட படியாக தான் இந்த நீட் விவகாரம் குறித்த கருத்து இருந்ததாக கூறப்படுகிறது.