TVK NTK: சட்டமன்ற தேர்தலில் யார் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார்கள் என்பதுதான் பெரிய கேள்வியாக உள்ளது. ஒரு பக்கம் அதிமுக பிளவு நிலையில் உள்ளது. மற்றொருபுறம் திமுக கூட்டணி கட்சிகள் தலைமை மீது அதிர்ச்சியில் உள்ளனர். மேற்கொண்டு பாஜக வலுவான கூட்டணி அமைக்க முயற்சி செய்து வருகிறது. இப்படி அரசியல் களமானது பல முனைகளில் இருப்பதைக் கண்டு விஜய் சுதாகரித்துக் கொண்டார். சீமானுடன் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆர்வம் காட்டி வருகிறார்.
இதற்கு பின்னணியில் ஒரு முக்கிய காரணம் உள்ளது, சீமானுடன் கூட்டணி வைக்கும் போது சிறுபான்மையினர் என தொடங்கி பிளவுவாத அரசியல் செய்பவர்கள் உள்ளிட்டோரின் வாக்குகளையும், ஆளும் கட்சி மீது அதிருப்தி உள்ள வாக்குகளையும் எளிமையாக கவர்ந்து விடலாம் என்று எண்ணுகிறாராம். ஆனால் சீமான் தற்போதைய சூழலில் பாஜகவுடன் கூட்டணி வைக்க இருப்பது போல் உள்ளது. அதுமட்டுமின்றி ஒரு பக்கம் அதிமுகவும் வலுவான கூட்டணி அமைக்க வேண்டுமென சீமானுடன் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறார்களாம்.
இதற்கு முன் தமிழக வெற்றிக் கழகம் முந்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே தேர்தல் வியூக வகுப்பாளர்களான ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரை சீமானிடம் பேசும்படி தூது அனுப்பியுள்ளார். இதனை சற்றும் கண்டுகொள்ளாத சீமான் இவர்கள் கொடுத்த நெருக்கடியை தாங்க முடியாமல் கிண்டல் அடித்து பேசியுள்ளாராம். உங்களுக்கு தான் 25% வாக்கு வாங்கி உள்ளது என்று வியூகம் கூறுகிறதே?? நீங்கள் ஏன் என் கூட்டணியை தேடுகிறீர்கள்?? தனித்தே நிற்கலாம் அல்லவா.
அதேபோல விஜய் தலைமையில் ஒருபோதும் என்னால் கூட்டணி வைக்க முடியாது அவர் வேண்டுமானால் என்னுடன் கூட்டணி வைத்துக் கொள்ளட்டும் என்று கூறியுள்ளார். இதைக் கேட்ட வியூக வகுப்பாளர்கள் வாயடைத்து போய் உள்ளனர். சீமானுடன் கூட்டணி வைக்கும் எண்ணமும் தவிடு பொடி ஆகிவிட்டதால் அடுத்த கட்ட நகர்வு குறித்து விஜய் ஆலோசனை செய்து வருகிறார் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.