விஜய் நடிக்கும் வாரிசு படத்தில் வியாபாரப் பணிகள் தொடக்கம் ! தயாரிப்பாளர் பெரும் மகிழ்ச்சி!

0
211

விஜய் நடிக்கும் வாரிசு படத்தில் வியாபாரப் பணிகள் தொடக்கம் ! தயாரிப்பாளர் பெரும் மகிழ்ச்சி!

வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு. இதில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் ஷாம், சரத்குமார், பிரகாஷ்ராஜ், குஷ்பு, ஜெயசுதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார்.

அடுத்த மாதம் இறுதிக்குள் இதன் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் வியாபாரப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி தியேட்டர் வெளியீட்டு உரிமை இல்லாமல், தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமம் முடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து தொலைக்காட்சி உரிமை ரூ50 கோடிக்கும், டிஜிட்டல் உரிமை ரூ60 கோடிக்கும், வெளிநாட்டு உரிமம் ரூ32 கோடிக்கும் மற்றும் இந்தி டப்பிங் உரிமை ரூ32 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆடியோ உரிமை ரூ10 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்த படப்பிடிப்பு முடியும் முன்பே ரூ180 கோடிக்கும் அதிகமாக வியாபாரம் ஆகி இருப்பதால் தயாரிப்பாளர் பெரும் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Previous articleஅவதூறு நோட்டீஸ் வழங்கிய அமைச்சர்! பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஐக்கிய ஜனதா தளம் தலைவா்! 
Next articleதமிழக மின்சார வாரியத்தில் 8000 பணியிடங்கள்! விரைவில் அறிவிப்பு