உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக…  விக்ரம் படத்தின் TV பிரிமீயர் பற்றி வெளியான தகவல்!

Photo of author

By Vinoth

உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக…  விக்ரம் படத்தின் TV பிரிமீயர் பற்றி வெளியான தகவல்!

Vinoth

உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக…  விக்ரம் படத்தின் TV பிரிமீயர் பற்றி வெளியான தகவல்!

கமல்ஹாசன் நடிப்பில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்த விக்ரம் திரைப்படம் வசூலில் கல்லா கட்டியது.

கமல்ஹாசனின் திரை வாழ்க்கையில் இப்படி ஒரு ஹிட் படம் அமையவில்லை என்று சொல்லும் அளவுக்கு தமிழ் சினிமாவே வியந்து பார்க்கும் அளவுக்கு ஹிட் படமாக அமைந்தது விக்ரம். இந்த படத்தின் வெற்றிக்கு கமல்ஹாசனுடன், விஜய் சேதுபதி, பஹத் பாசில், அனிருத், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என பக்கபலமாக பல நட்சத்திரங்கள் இருந்து செயல்பட்டனர்.

இந்த ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி ‘விக்ரம்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. வெளியானது முதல் உடனடியாக பாஸிட்டிவ் ரிப்போர்ட்களைப் பெற்ற விக்ரம் திரைப்படம் திரையரங்குகள் மூலமாக மட்டும் 450 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 170 கோடி ரூபாய்க்கு மேல் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை தமிழகத்தில் எந்தவொரு படமும் படைக்காத வசூல் சாதனை இது.

இதையடுத்து ஜூலை 8 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த திரைப்படம் 5 மொழிகளில் வெளியானது. 50 ஆவது நாள் மற்றும் 75 ஆவது நாள் ஆகிய சாதனைகளைப் படைத்தது. இதையடுத்து இப்போது முதல் முறையாக தொலைக்காட்சியில் இந்த படம் ஒளிபரப்பாக உள்ளது. ஆனால் தமிழில் அல்ல. விக்ரம் ஹிட் லிஸ்ட் என்ற பெயரில் இந்தியில் ரிலீஸ் ஆன விக்ரம் திரைப்படம், செப்டம்பர் 24 ஆம் தேதி ஸ்டார் கோல்ட் சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.