குழந்தைக்காக ஐஸ் க்ரீம் ஆர்டர் செய்த நபருக்கு ‘ஆணுறையை’ டெலிவரி செய்த நிறுவனம்!

0
177

குழந்தைக்காக ஐஸ் க்ரீம் ஆர்டர் செய்த நபருக்கு ‘ஆணுறையை’ டெலிவரி செய்த நிறுவனம்!

கோயம்புத்தூரைச் சேர்ந்த அந்த நபர் தனது குழந்தைக்காக ஸ்விக்கி நிறுவனத்தில் ஐஸ் கிரிம் ஆர்டர் செய்துள்ளார்.

கோயம்புத்தூரைச் சேர்ந்த பெரியசாமி என்ற நபர் தனது குழந்தைகளுக்கு ஸ்விக்கியில் ஐஸ்கிரீம் மற்றும் சிப்ஸ் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் ஸ்விக்கி டெலிவரி பாய் அதை அவரிடம் கொண்டு வந்து சேர்க்கும் போது பார்சலில் ஐஸ்கிரீமுக்குப் பதில் ஆணுறைகள் இருந்துள்ளன.

இதையடுத்து அவர் அந்த இரண்டு ஆணுறை பாக்கெட்டுகளின் புகைப்படத்துடன், ட்விட்டரில் பகிர்ந்தார். அவரது ட்வீட் பின்னர் நீக்கப்பட்டாலும், மற்றொரு ட்விட்டர் பயனர் அதன் ஸ்கிரீன் ஷாட்டை எடுத்து பகிர்ந்துள்ளார். இதையடுத்து அந்த ட்வீட் கவனம் பெற பலரும் அதைப் பகிர்ந்து தங்கள் கண்டனங்களையும் ஸ்விக்கி நிறுவனத்தைக் கேலி செய்தும் ட்வீட் செய்ய ஆரம்பித்தனர்.

இந்த ட்வீட்கள் வைரலானதை அடுத்து அந்த நபரிடம் ஸ்விக்கி நிறுவனம் மன்னிப்புக் கேட்டு அவருக்கு பணத்தைத் திரும்ப தர ஒப்புக்கொண்டதாக சொல்லப்படுகிறது. ஹோட்டலில் சென்று உணவு சாப்பிடும் பழக்கத்தை இதுபோன்ற டெலிவரி நிறுவனங்கள் வெகுவாகக் குறைத்துள்ள நிலையில் இதுபோன்ற குழப்பங்களுக்கும் பஞ்சம் இல்லாமல் இருந்து வருகிறது. இதுபோன்ற குளறுபடி சம்பவங்கள் இதற்கு முன்பும் சில தடவை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.