பொன்னியின் செல்வன் வெற்றிக்குப் பிறகு விக்ரம்மின் அடுத்த படம்… ஷூட்டிங் எப்போது?… வெளியான தகவல்!

0
248

பொன்னியின் செல்வன் வெற்றிக்குப் பிறகு விக்ரம்மின் அடுத்த படம்… ஷூட்டிங் எப்போது?… வெளியான தகவல்!

நடிகர் விக்ரம் நீண்ட இடைவெளிக்கு பிறகு பொன்னியின் செல்வன் படம் மூலமாக வெற்றியை சுவைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக பா.ரஞ்சித் இருந்து வருகிறார்.இவர் இதுவரை தமிழில் ஐந்து திரைப்படங்களை இயக்கி உள்ளார்.ஆனால் குறுகிய காலத்திலேயே இவரின் திரைப்படங்கள் அதிக அளவில் பேசப்பட்டன.மேலும் வெற்றியும் பெற்றன.இதற்குக் காரணம் இவரின் படங்கள் அரசியல் சார்ந்து இருக்கும்.2012ம் ஆண்டு இவர் இயக்கிய அட்டகத்தி திரைப்படம் மூலம் இவர் இயக்குனராக அறிமுகம் ஆனார்.

சமீபத்தில் இவர் இயக்கிய ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படம் ரிலீஸான நிலையில், அடுத்து அவர் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிரார். கோலார் தங்க வயல்களில் வசித்த 19 ஆம் நூற்றாண்டு தமிழர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டும் உருவாக்கப்படுகிறதாக சொல்லப்படுகிறது.

அந்நியன் படத்துக்குப் பிறகு கமர்ஷியல் வெற்றியைப் பெறாமல் போராடிக் கொண்டிருந்த விக்ரம்முக்கு சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் மூலமாக நிறைவேறியுள்ளது. விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் சுமார் 400 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்று கணிக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த வெற்றிக்கொண்டாட்டத்துக்குப் பிறகு விக்ரம்  பா ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் அக்டோபர் 18 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. படத்தின் டைட்டில் மற்றும் மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleநிலத்தை அபகரித்த மாநகராட்சி: தலைமைச் செயலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண் !
Next articleதமிழக அரசை பாராட்டிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்! உற்சாகத்தில் உடன்பிறப்புகள்