“நான் நன்றாக இருக்கிறேன்… வதந்தியை கிளப்புறாங்க…” ‘கோப்ரா’ இசை வெளியீட்டில் விக்ரம் பேச்சு!

Photo of author

By Vinoth

“நான் நன்றாக இருக்கிறேன்… வதந்தியை கிளப்புறாங்க…” ‘கோப்ரா’ இசை வெளியீட்டில் விக்ரம் பேச்சு!

Vinoth

Updated on:

“நான் நன்றாக இருக்கிறேன்… வதந்தியை கிளப்புறாங்க…” ‘கோப்ரா’ இசை வெளியீட்டில் விக்ரம் பேச்சு!

நடிகர் விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.

கடந்த சில நாட்களுக்கு விக்ரம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மாரடைப்பு என வதந்திகள் பரவின. ஆனால் வெறும் வாயுப்பிடிப்பு என்று அவரது தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனால் அவர் நடித்த பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில் கூட அவர் கலந்துகொள்ளவில்லை.

இதையடுத்து மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய விக்ரம் நேற்று நடைபெற்ற கோப்ரா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டுள்ளார். விக்ரம் உடன் அவர் மகன் துருவ்வும் கலந்துகொண்டார்.

விழாவில் பேசிய அவர் “நான் நன்றாக இருக்கிறேன். எனக்கு ஹார்ட் அட்டாக் இல்லை. இப்போது கூட நெஞ்சில் கைவைத்துக் கொண்டே பேசினால் நெஞ்சுவலி எனக் கிளப்பிவிட்டு விடுவார்கள். ரசிகர்களை சந்திப்பதற்கும் நான் நலமாக இருப்பதை சொல்வதற்காகவும்தான் இன்று நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்” எனப் பேசினார்.

விக்ரம் நடிப்பில் அடுத்த ரிலீஸாக வர உள்ளது கோப்ரா திரைப்படம். இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸாகும் இந்த படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது.