விசாரணைக்கு வராத வழக்கு! மகிழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர்!

0
94

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது 4,800 கோடி ரூபாய் முறைகேடு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் நேற்று அந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை நேற்று அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த 2018 ஆம் வருடம் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில் அப்போதைய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நெடுஞ்சாலை துறை ஒப்பந்தங்களை தன்னுடைய உறவினர்களுக்கு வாங்கியதன் மூலமாக 4800 கோடி ரூபாய் முறையீடு செய்திருப்பதாக கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீதான குற்றச்சாட்டை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது.

இதனை எதற்கும் விதமாக எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

இந்த நிலையில், 4 வருடங்களுக்குப் பிறகு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை.