மணிரத்னம் மேல் அதிருப்தியில் விக்ரம்?… ‘பொன்னியின் செல்வன்’தான் காரணமா?

Photo of author

By Vinoth

மணிரத்னம் மேல் அதிருப்தியில் விக்ரம்?… ‘பொன்னியின் செல்வன்’தான் காரணமா?

Vinoth

மணிரத்னம் மேல் அதிருப்தியில் விக்ரம்?… ‘பொன்னியின் செல்வன்’தான் காரணமா?

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய 30 ஆண்டுகால கனவுப் கனவுப் படைப்பாப பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் (பழுவேட்டரையர்), பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தோட்டாதரணி கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே முழுவதுமாக நிறைவடைந்து விட்டது.

செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி பொன்னியின் செல்வன் -1 ரிலீஸ் ஆக உள்ளது. இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் படத்தின் டீசர் வெளியானது. உடல்நலக்குறைவு காரணமாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் நடிகர் விக்ரம் கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில் தற்போது விக்ரம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இயக்குனர் மணிரத்னத்தின் மேல் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனென்றால் தன்னுடைய கதாபாத்திரத்துக்கு படத்தில் மற்றவர்களை விட குறைவான காட்சிகளே உள்ளதாக அவர் நினைக்கிறாராம். அதுவும் இல்லாமல் இரண்டாம் பாகத்தில் அவரது கதாபாத்திரம் கொலை செய்யப்பட்டு விடும் என்பதால் அவருக்கு மிகப்பெரிய அளவில் காட்சிகள் இருக்காது என்றும் சொல்லப்படுகிறது. பொன்னியின் செல்வன் நாவலின் படியே ஆதித்தகரிகாலன் கதாபாத்திரம் முக்கியத்துவம் குறைவாகக் கொண்ட ஒன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது.