கே.ஜி.எப் படத்தை குறி வைத்து எடுக்கும் விக்ரமின் “தங்கலான்”!! மொத்த பட்ஜெட் இவ்வளவா??
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளவர் தான் விக்ரம் அவர்கள். தனது தனித்துவ நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களை தனது பக்கம் வைத்திருக்கும் பிரபல நடிகர்களுள் இவரும் ஒருவர்.
விக்ரம் 1988 ஆம் ஆண்டு கலாட்டா குடும்பம் என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.அதன் பிறகு 1990 ஆம் ஆண்டு என் காதல் கண்மணி என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.
இவர் நடிப்பில் வெளியான சேது என்னும் திரைப்படம் தமிழ் ரசிகர்களிடையே விக்ரம் பற்றிய கவனத்தை ஏற்படுத்தியது.இந்த படம் விக்ரமை சினமாவின் அடுத்த கட்டத்திற்கு அழைத்து சென்றது.
இதுவரையில் விக்ரம் அவர்கள் 7 பிலிம்பேர் விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்பொழுது இயக்குனர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையில் நடிகர் விக்ரம் நடித்து வரும் படம் ‘தங்கலான்’. இப்படத்தில் மேலும் பார்வதி, மாளவிக மோகனன்,பசுபதி,ஹரி,பிரிட்டிஷ் நடிகர் டானியல் கால்டகிரோன் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
இப்படம் தெலுங்கில் வெளியான கே.ஜி.எப். படத்தை குறித்த கதை என இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்தார்.ஆகயால் இப்படம் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்ப்பார்ப்பை கொண்டிருந்தது.
இந்த படத்தின் படபிடிப்பு பணிகள் விரைவாக நடைபெற்று கொண்டு வருகின்ற நிலையில் இந்த படத்தை பண்டிகை தினத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலில் படக்குழு குறைவான பஜ்ஜெட்டில் தங்கலான் படத்தை எடுக்க திட்டமிட்டுள்ள நிலையில் தற்பொழுது படத்தின் பட்ஜெட் மட்டும் சுமார் 100 கோடியை தாண்டி உள்ளதாக தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியுள்ளார்.