கிராமத்து மக்கள் விரும்பி உண்ணும் உப்பு கண்டம்!! அடேங்கப்பா இதில் இத்தனை நன்மைகள் இருக்கா?

Photo of author

By Gayathri

உங்களில் பலர் கோழி,ஆடு,மீன் போன்ற அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவீர்கள்.அசைவ உணவிகளில் புரதம்,நல்ல கொலஸ்ட்ரால் அதிகளவு இருக்கிறது.இதை உணவாக எடுத்துக் கொள்வதால் தசை வலிமையடைகிறது.

ஆனால் இதை விட அதிக சத்துக்கள் உப்பு கண்டத்தில் தான் இருக்கிறது.ஆட்டிறைச்சியை வைத்து தயாரிக்கப்படும் இந்த உப்புக்கண்டம் கிராமப்புறங்களில்பேமஸான ஒன்று.பண்டிகை தினங்களில் மீதமாகும் ஆட்டிறைச்சியை உப்புக்கண்டம் தயாரிக்கப்படுகிறது.

நீங்கள் விரும்பும் உப்புக்கண்டம் தயாரிப்பது எப்படி?

உப்புக்கண்டம்

1)ஆட்டிறைச்சி
2)மிளகாய் தூள்
3)மஞ்சள் தூள்
4)உப்பு
5)பூண்டு
6)இஞ்சி

முதலில் ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும்.பிறகு 20 பல் பூண்டை தோல் நீக்கி கொள்ளவும்.எவை இரண்டையும் அரைத்து ஒரு கிண்ணத்தில் போடவும்.[பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி மஞ்சள் தூள்,இரண்டு தேக்கரண்டி மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.

பிறகு அரை கிலோ ஆட்டிறைச்சி துண்டுகளை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து தயாரித்து வைத்துள்ள பேஸ்டை போட்டு நன்கு கலந்து விடவும்.மசாலா ஆட்டிறைச்சியில் இறங்குவதற்காக அரை மணி ஊறவிடவும்.

பிறகு இந்த கறி துண்டுகளை ஒரு நூலில் கோர்த்து வெயிலில் ஒரு வாரம் வரை காயவைத்து எடுத்தால் உப்புக் கண்டம் ரெடி.இதை எண்ணெயில் பொரித்தோ அல்லது குழம்பு வைத்தோ சாப்பிடலாம்.உப்புக்கண்டத்தில் அதிகளவு புரோடீன் இருக்கிறது.உப்புக் கண்டம் சாப்பிடுவதால் உடலில் நீர்ச்சத்து தக்கவைக்கப்படுகிறது.