சடலத்தை வைத்து மறியலில் ஈடுபட்ட ஊர் மக்கள்!! விரைந்து வந்த அதிகாரிகள்?..

Photo of author

By Parthipan K

சடலத்தை வைத்து மறியலில் ஈடுபட்ட ஊர் மக்கள்!! விரைந்து வந்த அதிகாரிகள்?..

ஓமலூரை அடுத்த தீவட்டிப்பட்டி நைனா காடு பகுதியில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கு வசித்து வருகின்றனர். இப்பகுதியில் யாராவது இருந்தால் அருகிலுள்ள கூகுட்டப்பட்டி ஊராட்சி சரபங்கா ஆற்றோடு அடக்கம் செய்வது அக்கால வழக்கமாக இருந்தது. நைனா காட்டிலிருந்து மயானத்திற்கு செல்லும் பாதை சம்பந்தமாக இரு தரப்பினர் கிடையே நீண்ட காலமாக தகராறு இருந்து வந்தது.

இதனால் உடலை மயானத்துக்கு கொண்டு செல்ல பாதை வசதி இல்லாமல் தொடர்ந்து தகராறு இருந்து வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டதுடன் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள். மேலும் அந்த பகுதியில் தொடர் போராட்டம் ஏற்பட்டது.இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சின்ராஜ் மனைவி சின்னதாயி இவருடைய வயது 80. இவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

அவரது உடலை அடக்கம் செய்ய பாதை அமைத்து தந்தால் தான் இவ்வுடலை எடுப்போம் என கூறி  உடலை சாலையில் வைத்தனர், பின் தகவலறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் காடையாம்பட்டி தாசில்தார் அருள் பிரகாஷ், துணை போலீஸ் சுப்பிரண்டு சங்கீதா,இன்ஸ்பெக்டர் ஆனந்த் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

சிறிது நேரம் ஊர் மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். எதற்கும் அடிபணியாத ஊர் பொதுமக்கள் தங்கள் போராட்டத்திலேயே கவனம் செலுத்தி வந்தனர். நீண்ட நேரம் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி jcp எந்திரம் கொண்டு மயானத்துக்குச் செல்லும் பாதை வழியாக சுமார் 250 மீட்டர் தூரம் அமைக்கப்பட்ட நல் நடப்பட்டது.

இதன் பிறகு இறந்த மூதாட்டியின் உடலை பொதுமக்கள் எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர். இதன் பிறகு அங்கு பரப்பரப்பு ஓய்ந்தது.  பின் போராட்டத்திலிருந்து கலைந்து சென்றனர்.