திரைப்படங்களில் வில்லன்கள் நிஜ வாழ்க்கையில் உண்மையான ஹீரோக்கள்!!! ஏழை மக்களுக்கு உதவி செய்யும் டாப் 5 வில்லன் நடிகர்கள்!!!

Photo of author

By Sakthi

திரைப்படங்களில் வில்லன்கள் நிஜ வாழ்க்கையில் உண்மையான ஹீரோக்கள்!!! ஏழை மக்களுக்கு உதவி செய்யும் டாப் 5 வில்லன் நடிகர்கள்!!!

திரைப்படங்களில் நடித்து வில்லன்கள் நாகமுத்து நம்மை மிரட்டி நம்மிடம் திட்டு வாங்கும் நடிகர்களுக்கு நிஜ வாழ்க்கை என்று உள்ளது. அதில் பலரும் பலவிதமாக இருக்கிறார்கள். மேலும் பலர் ஏழை எளிய மக்களுக்கு தேவையான மற்றும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் நிஜ வாழ்க்கையில் உண்மையான ஹீரோக்களாக வாழும் டாப் 5 நடிகர்கள் யார் யார் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

திரைப்படங்களில் ஹீரோக்களை விட வில்லன் கதாப்பாத்திரங்களுக்குத் தான் தற்பொழுது முக்கியத்துவம் அதிகம் கொடுக்கப்படுகின்றது. அவ்வாறு திரைப்படங்களில் வில்லன்களாக தோன்றும் நடிகர்கள் நிஜ வாழ்க்கையில் வேறு விதமாக உள்ளார்கள்.

அந்த வகையில் திமிரு பிடிச்சவன் திரைப்படத்தில் நடித்த பாக்சர் தீனா, குருவியில் கோச்சாவாக நடித்த சுமன், அருந்ததி பட வில்லன் சோனு சூட், சண்டகோழி படத்தில் வில்லனாக நடித்து அசத்திய நடிகர் லால், குட்டிப் புலி திரைப்படத்தில் வில்லனாக நடித்த நடிகர் ராஜ சிம்ஹன் ஆகிய 5 நடிகர்கள் நிஜ வாழ்க்கையில் உண்மையான ஹீரோக்களாக இருக்கிறார்கள்.

பாக்சர் தீனா…

நடிகர் பாக்சர் தீனா கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விருமாண்டி திரைப்படத்தில் ஜெயில் வார்டன் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். அதன் பிறகு இயக்குநர் சங்கர் இயக்கிய எந்திரன் திரைப்படத்தில் ஒரே ஒரு டயலாக்கை கூறி பிரபலமடைந்தார். அதன் பிறகு நடிகர். விஜய் ஆண்டனி நடித்த திமிரு பிடிச்சவன் திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார்.

திரைப்படத்தில் தான் வில்லனாக இருப்பார். நிஜ வாழ்க்கையில் இவர் ஒரு குழந்தை குணம் கொண்டவர் ஆவார். இவர் மறைந்த நடிகர் விருச்சிக காந்த் அவர்களின் குடும்பத்திற்கு உதவி செய்துள்ளார். மேலும் கொரோனா நோய் தொற்று காலத்தில் சுமார் 250 குடும்பங்களுக்கு தேவையான மளிகை பொருட்கள், அரிசி, கோதுமை, உணவுகள் ஆகியவற்றை வழங்கினார். மேலும் பல உதவிகள் செய்து வருகின்றார்.

சோனு சூட்…

நடிகர் சோனு சூட் அவர்கள் அருந்ததி திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார். இவர் மேலும் பல திரைப்படங்களில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். திரைப்படங்களில் கொடூரமான வில்லனாக தோன்றிய நடிகர் சோனு சூட் நிஜமான வாழ்கையில் மிகப் பெரிய சமூக சேவகர். கொரோனா காலத்தில் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வந்தார். மேலும் தனது எக்ஸ் பக்கம் வாயிலாக உதவி கேட்கும் மக்களுக்கு முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.

நடிகர் லால்…

சண்டைக்கோழி திரைப்படத்தில் நடிகர் விஷாலுக்கு வில்லனாக நடித்த மலையாள நடிகர் லால் அவர்கள் தமிழில் பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். சுல்தான், கர்ணன், பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்களிலும் முக்கயமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். பார்ப்பதற்கு கரடு முரடான தோற்றத்தில் காணப்படும் நடிகர் லால் அவர்கள் தற்பொழுது வரை பல சமூக சேவைகளை செய்து வருகிறார்.

நடிகர் ராஜ சிம்ஹன்…

குட்டிப்புலி திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகர் ராஜ சிம்ஹன் அவர்கள் கொம்பன், என்னை அறிந்தால், கொடி ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிப்பதில் மட்டும் ஆர்வம் கொண்டவராக இல்லாமல் மக்களுக்கு உதவி செய்வதிலும் ஆர்வம் கொண்டவராகவும் நடிகர் ராஜ சிம்ஹன் அவர்கள் இருக்கிறார். இவர் தொடர்ந்து ஆறு மாதத்திற்கும் மேல் சென்னை சாலிகிராமத்தில் வசிக்கும் ஏழை மக்களுக்கு உணவுகளை வழங்கியுள்ளார்.

நடிகர் சுமன்…

நடிகர் சுமன் அவர்களின் பெயரை செல்வதை விட குருவி திரைப்படத்தில் நடித்து கதாப்பாத்திரத்தின் பெயரை கூறினால் அனைவருக்கும் தெரியும். நடிகர் சுமன் அவர்கள் குருவி திரைப்படத்தில் கோச்சா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வில்லனாக அசத்தியிருப்பார். 1970களில் நடிக்கத் தொடங்கிய நடிகர் சுமன் தற்பொழுது வரை நடித்துக் கொண்டு இருக்கிறார். இவர் திரைப்படங்களில் வில்லனாக தோன்றினாலும் நிஜ வாழ்க்கையில் சமூக சேவகர். இவர் பல மக்களுக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றார்.