விஜய், அஜித்துக்கு போட்டியாக பொங்கலுக்கு வரும் விமலின் அடுத்த படம்!

0
173

விஜய், அஜித்துக்கு போட்டியாக பொங்கலுக்கு வரும் விமலின் அடுத்த படம்!

விமல் நடித்துள்ள புதிய படம் ஒன்று பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக  இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. படத்தில் மஞ்சு வாரியர் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யின் 66 ஆவது படமான ‘வாரிசு’ படத்தை இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என சில மாதங்களுக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டது.

இந்த இரு படங்களும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ள நிலையில் விமல் நடித்துள்ள மற்றொரு படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் மஜித் இயக்கும் புதிய படத்தில் விமல் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ள படமும் ரிலீஸாகும் என்று அறிவிகப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

Previous article”இந்திய அணிக்கு 30 சதவீத வாய்ப்புதான் இருக்கு…” முன்னாள் கேப்டன் அதிரடி கருத்து!
Next articleஷாகீன் அப்ரிடிய எப்படி எதிர்கொள்வது… இந்திய அணிக்கு சச்சினின் அட்வைஸ்!