”இந்திய அணிக்கு 30 சதவீத வாய்ப்புதான் இருக்கு…” முன்னாள் கேப்டன் அதிரடி கருத்து!

0
82

”இந்திய அணிக்கு 30 சதவீத வாய்ப்புதான் இருக்கு…” முன்னாள் கேப்டன் அதிரடி கருத்து!

இன்னும் சில நாட்களில் ஆஸ்திரேலியாவில் டி 20 உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு சாம்பியனான ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ளது. இந்த முறை இந்த தொடரில் 16 அணிகள் மோத உள்ளன. இந்திய அணி கடைசியாக 2007 ஆம் அண்டு கோப்பையை வென்றது. அதன் பிறகு 15 ஆண்டுகளாக இன்னும் அந்த வாய்ப்பு அமையவில்லை. அதனால் இந்த முறைய கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆசை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

இந்நிலையில் முன்னாள் வீரர்கள் பலரும் அரையிறுதிக்கு தகுதிப் பெறும் அணிகள் எவை என்பது குறித்து கணிப்புகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், அரையிறுதிக்கு செல்ல இந்திய அணிக்கு செல்ல 30 சதவீத வாய்ப்புதான் உள்ளது.

“டி20 கிரிக்கெட்டில், ஒரு போட்டியில் வெற்றி பெறும் அணி அடுத்த போட்டியில் தோல்வியடையலாம்… இந்தியா உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்புகளைப் பற்றி பேசுவது மிகவும் கடினம். பிரச்சனை என்னவென்றால், அவர்களால் முதல் நான்கு இடங்களுக்குள் வர முடியுமா?

மேலும் அவர்கள் முதல் நான்கு இடங்களுக்குள் வருவதைப் பற்றி நான் கவலைப்படுகிறேன். அப்போது தான் எதையும் கூற முடியும். என்னைப் பொறுத்தவரை, இந்தியா முதல் நான்கு அணிகளுக்குள் வருவதற்கு 30 சதவீத வாய்ப்பு மட்டுமே உள்ளது,” என்று லக்னோவில் நடந்த ஒரு விளம்பர நிகழ்வின் ஓரத்தில் கபில் தேவ் செவ்வாயன்று கூறினார்.