பெண்கள் வன்கொடுமை எதிரொலி!! மெரீனாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!!
மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர்கள் பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினர் போராட்டம் நடத்தினார். அதனையடுத்து மணிப்பூரில் இரண்டு பழங்குடியினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறை சம்பவம் இரண்டு மாதங்களாக நடந்து வருகிறது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக வீதிகளில் அழைத்துச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்த கும்பல் அந்தப் பெண்கள் இருவரையும் வயல்வெளியில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் நாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்தியது.
இந்த சம்பாவத்திற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேரீனாவிலும் இதனை கண்டித்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற உள்ளதாக தமிழக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையால் மெரீனா கடற்கரை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் மெரீனா கலங்கரை விளக்கம் முதல் நேப்பியர் பாலம் வரை அதிக அளவில் போலீசார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்கள். மேலும் இந்த பாதுகாப்பு பணியில் ஒரு காவல் ஆய்வாளர் நான்கு உதவி ஆய்வாளர்கள் மொத்தம் 40 போலீசார்கள் ஈடுப்பட்டுள்ளர்கள். அதனை தொடர்ந்து கண்காணிப்பு பணி காவல் ஆய்வாளர் தலைமையில் ஈடுப்பட்டுள்ளர்க்ள.
ஏற்கனவே மணிப்பூர் விவகாரத்தை எதிர்த்து மெரீனா கடற்கரை பகுதியில் கைப்பேசி விளக்குகளை ஒளிரச் செய்து சிலர் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மேலும் இந்த போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தார்கள். இது போல நடக்க கூடாது என்பதற்காக இன்று மெரீனா பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளர்க்ள.