தொடரும் ஃபார்ம் அவுட்டுக்கு மத்தியில் விளம்பரத்தில் கோலி… வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

Photo of author

By Vinoth

தொடரும் ஃபார்ம் அவுட்டுக்கு மத்தியில் விளம்பரத்தில் கோலி… வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

Vinoth

Updated on:

தொடரும் ஃபார்ம் அவுட்டுக்கு மத்தியில் விளம்பரத்தில் கோலி… வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோஹ்லி ரன்கள் சேர்க்க முடியாமல் சொதப்பி வருகிறார்.

கடந்த 2 ஆண்டுகளாக விராட் கோலி மோசமான ஆட்டத்திறனில் இருக்கிறார். அவர் சர்வதேச போட்டிகளில் சதமடித்து சில வருடங்கள் ஆகிவிட்டன. விரைவில் அவர் மீண்டும் பழைய கோலியாக திரும்பி வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

இதற்கிடையில் முன்னாள் வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் அவர் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். உள்ளூர் போட்டிகளில் விளையாடி மீண்டும் ஃபார்முக்கு வந்து இந்திய அணியில் விளையாட வேண்டும் எனவும் கருத்துகள் எழுந்துள்ளன. அதே சமயம் கோலிக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்போது கோலியின் செயல் ஒன்று ரசிகர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது. தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில் பயிற்சியில் ஈடுபட்டு மீண்டும் ஃபார்முக்கு வருவதற்கு பதில் ட்விட்டரில் விளம்பர வீடியோ ஒன்றில் நடித்துள்ளார். இது சம்மந்தமான வீடியோவை அவர் பகிர, ரசிகர்கள் இப்போது விமர்சனங்களையும் கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர்.