cricket: இந்திய அணியின் ஜாம்பவான் விராட் கோலி தொடர்ந்து மோசமான பேட்டிங் வெளிப்படுத்தி வரும் நிலையில் ரசிகர்கள் உருக்கம்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து தொடரில் இந்திய அணி ஜாம்பவான் விராட் கோலி 6 இன்னிங்ஸில் விளையாடி 93 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். தற்போது நடைபெற்று வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான தொடர் முதல் போட்டியில் சதம் விளாசினார். ஆனால் அதன் பின் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வருகிறார்.
இதுகுறித்து ரசிகர் ஒருவர் கண்ணீருடன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் நான் உங்களை யாருடனும் ஒப்பிட வில்லை, நீங்கள் மட்டுமே உங்களுக்கு நிகர் கடந்த சில ஆண்டுகளாக நான் உங்களின் ரசிகராக கஷ்டமாக உணர்கிறேன். நீங்கள் குறைந்த ரன்கள் எடுப்பதால் இல்லை நீங்கள் உங்கள் விக்கெட்டை பறிகொடுக்கும் விதம் தான். நீங்கள் இதுவரை சேர்த்த புகழை நீங்களே சேதப்படுத்தி வருகிறீர்கள்.
உங்களின் டெஸ்ட் சராசரி 47 க்கு குறைவாக செல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நீங்கள் பேட்டிங்கில் மோசமாகி வருகிறீர்கள் உங்கள் ஓய்வு குறித்து சிந்தியுங்கள் இப்படிக்கு ஏமாந்த ரசிகர் என கடிதம் எழுதியுள்ளார்.
இந்திய அணி நடந்து கொண்டிருக்கும் ஆஸ்திரேலியா தொடரில் 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி போட்டிக்கு தகுதி பெறும். நடைபெற்று வரும் மூன்றாவது போட்டியில் 180 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது இந்திய அணி.