இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடி முடித்த நிலையில் தற்போது அந்த போட்டி குறித்து பல விமர்சனங்கள் இந்தியா மீது எழுந்து வருகிறது. இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது இதில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வென்றது.
இந்த போட்டி தொடரில் நான்காவது போட்டியில் கொன்ஸ்டாஸ் அறிமுக வீரராக களமிறங்கினார். அந்த போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி மற்றும் ஆஸ்திரேலிய இளம் வீரர் கொன்ஸ்டாஸ் இடையில் சிறிய மோதல் ஏற்பட்டது. இந்த செயல் தியாக பரவியதை தொடர்ந்து அதிகம் பேசப்பட்டது. இதில் விராட் கோலி அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளானார். மேலும் இது குறித்து மனம் திறந்துள்ளார் கொன்ஸ்டாஸ்.
இது குறித்து பேசிய கொன்ஸ்டாஸ் களத்தில் சண்டை என்றால் எதிரி இல்லை. அவர் இப்போது என்னுடைய ரோல் மாடல் தான். களத்தில் நடந்த அந்த சம்பவம் எனக்கு புதிதாக இருந்தது. அவர் காலத்திற்கு வரும்போதெல்லாம் விராட் கோலி வருகிறார். விராட் கோலி பேட்டிங் செய்கிறார் என்று வியப்பில் பார்த்து ரசித்தேன் அவர் வரும்போது மைதானம் முழுவதும் அவர் பெயர் உச்சரிப்பு தான். நான் அவரை போட்டி முடிந்த பின் சந்தித்தேன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன், அவரிடம் நான் நீங்கள் தான் என் ரோல் மாடல் என்பதை கூறினேன். அவரும் அமைதியான நல்ல மாமனிதன் என்பதை நிரூபித்து விட்டார். இலங்கை தொடரில் இடம் பிடித்தால் சிறப்பாக விளையாட வாழ்த்துக்கள் என்று கூறினார்.