மீண்டும் சிறப்பாக விளையாடிய விராட் கோஹ்லி!!! 5வது வெற்றியை பதிவு செய்த இந்திய அணி!!!

0
29
#image_title

மீண்டும் சிறப்பாக விளையாடிய விராட் கோஹ்லி!!! 5வது வெற்றியை பதிவு செய்த இந்திய அணி!!!

விராட் கோஹ்லி அவர்களின் சிறப்பான ஆட்டத்தினால் நியூசிலாந்து அணிக்கு எதிரான லீக் சுற்றில் இந்திய அணி வெற்றி பெற்று நடப்பு உலகக் கோப்பை தொடரில் 5வது வெற்றியை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

நேற்று(அக்டோபர்22) தர்மசாலாவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் விளையாடியது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர் கான்வே ரன் எடுக்காமலும், மற்றொரு தொடங்கிய வீரர் வில் யங் 17 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். அதன் பின்னர் இணைந்த ரச்சின் ரவீந்திரா மற்றும் டேரில் மிட்செல் இணை ரன் குவிக்க தொடங்கினர்.

தொடர்ந்து விளையாடிய ரச்சின் ரவீந்திரா அரைசதம் அடித்து 75 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மற்றொரு புறம் சிறப்பாக விளையாடிய டேரில் மிட்செல் சதமடித்து 130 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க நியூசிலாந்து அணி 50 ஓவர்களின் முடிவில் 10 விக்கெட்டுகளை இழந்து 273 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியில் பந்துவீச்சில் முகமது ஷமி சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், பும்ரா, சிராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதையடுத்து 274 ரன்களை இலக்காகக் கொண்டு களிமிறங்கிய இந்திய அணிக்கு தொடங்கிய வீரர்களாக களமிறங்கிய சுப்மான் கில் மற்றும் ரோஹித் சர்மா இணை முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்தது. ரோஹித் சர்மா 46 ரன்களும், சுப்மான் கில் 26 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து களமிறங்கிய விராட் கோஹ்லி பொறுமையாக விளையாடத் தொடங்கினார். ஒருபுறம் ஸ்ரேயாஸ் ஐயர் 33 ரன்களுக்கும், கே.எல் ராகுல் 27 ரன்களுக்கும், சூரியக்குமார் யாதவ் 2 ரன்களுக்கும் ஆட்டமிழக்க மற்றொரு புறம் சிறப்பாக விளையாடிய விராட் கோஹ்லி அரைசதம் அடித்தார்.

சதம் அடிக்க 5 ரன்களே இருக்கும் நிலையில் விராட் கோஹ்லி அவர்கள் 95 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து மற்றொரு புறம் விளையாடிய ரவீந்திர ஜடேஜா அவர்கள் 39 ரன்கள் சேர்க்க இந்திய அணி 48 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து இந்திய அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து வெற்றி பெற்று தனது 5 வது வெற்றியை பதிவு செய்துள்ளது. மேலும் நடப்பு உலகக் கோப்பை தொடரின் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.