சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனை படைக்க உள்ள விராட் கோலி!! குவியும் வாழ்த்துக்கள்!!
கிரிக்கெட்டில் ஒரு மிகப்பெரிய ஆக்ரோஷமான வீரர் என்று அழைக்கப்படுபவர் தான் விராட் கோலி. இவர் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒரு மிகப்பெரிய சாதனையை படைக்க உள்ளார்.
இதுவரை இந்திய அணிக்காக 500 சர்வதேச போட்டிகளில் விளையாடி சாதனை படைத்த முன்னாள் வீரர்களான சச்சின், தோனி, ராகுல் டிராவிட் ஆகியோருக்கு அடுத்த படியாக விராட் கோலி சாதனை படைக்க உள்ளார்.
இதனைத் தொடர்ந்து இவர் உலக அளவில் விளையாடிய ஐநூறு சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ள பத்தாவது வீரர் என்ற பெருமையையும் பெற உள்ளார்.
மேலும், இந்த சாதனை பட்டியலில் ஷாகித் அப்ரிடி, சனத் ஜெயசூர்யா மற்றும் ஜாக் காலிஸ் ஆகியோரும் இதில் முதல் பத்து இடங்களில் இருக்கின்றனர்.
இந்த அனைத்து போட்டிகளிலும் விராட் மொத்தமாக 75 சதங்களை அடித்துள்ளார். நூறு சதங்கள் அடித்து சச்சின் டெண்டுல்கர் முதல் இடத்தை பிடித்திருக்கும் பட்சத்தில், தற்போது இரண்டாவது இடத்தில் விராட் கோலி உள்ளார்.
இதுவரை இந்திய அணிக்காக இவர் விளையாடி மொத்தம் 110 டெஸ்ட் போட்டிகளில் 8,555 ரன்களை எடுத்துள்ளார். மேலும், 274 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12,898 ரன்களை எடுத்துள்ளார்.
இந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இன்று நடைபெறும் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி விராட் கோலிக்கு ஐநூறாவது சர்வேதேச போட்டி என்பது மட்டுமல்லாமல், இந்த டெஸ்ட் போட்டியானது இந்திய அணிக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் இடையே நடைபெறுகின்ற நூறாவது போட்டியும் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.