விராட் கோலி  திருந்தவே மாட்டாரா?? தொடர்ந்து செய்யும் ஒரே தவறு..மூன்றாவது போட்டியிலும் சொதப்பல்!!

Photo of author

By Vijay

cricket: இந்திய அணியின் முக்கிய வீரர் விராட் கோலி மீண்டும் அதே தவறை செய்து விக்கெட்டை இழந்துள்ளார்.

இந்திய அணி ஆஸ்திரேலியா அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் நிலையில் மழை காரணமாக போட்டி இன்று முடிவடைந்தது. 51 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இந்தியா கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர் கே எல் ராகுல் களத்தில் உள்ளனர்.

இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பு பிரகாசம் ஆகும். எனவே ஏற்கனவே நடந்த முடிந்த போட்டிகளில் இந்தியா ஒரு போட்டியும் ஆஸ்திரேலியா ஒரு போட்டியும் வென்றுள்ளது. மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெல்லும் வாய்ப்பு மங்கியுள்ளது.

ஏனெனில் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது அதில் 445 ரன்கள் அடித்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழந்துள்ளது. 51 ரன்கள் எடுத்துள்ளது.முதல் போட்டியில் மட்டும் சதம் விளாசிய நட்சத்திர வீரர் விராட் கோலி அடுத்தடுத்த போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வருகிறார்.

விராட் கோலி ஸ்டம்ப் லைன் வெளியே செல்லும் பந்தை அடிக்க முயன்று விக்கெட் விடுவதை வழக்கமாக்கி வருகிறார். இந்த மூன்றாவது போட்டியிலும் அதே தவறை செய்து 3 ரன்களில் விக்கெட்டை இழந்துள்ளார். இந்நிலையில் இந்திய அணி ரசிகர்கள் அவர் திருந்தவே மாட்டாரா? எதற்காக அதே தவறை செய்து வருகிறார் என கேள்வி எழுப்பி வருகிறார்