ஷாஹீன் அஃப்ரிடி வீசிய பந்தை பார்த்து விராட் கோலி கொடுத்த ரியாக்‌ஷன் – வைரலாகும் வீடியோ !

0
33

ஷாஹீன் அஃப்ரிடி வீசிய பந்தை பார்த்து விராட் கோலி கொடுத்த ரியாக்‌ஷன் – வைரலாகும் வீடியோ !

இன்று நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், ரோஹித் ஷர்மாவுக்கு ஷாஹீன் அஃப்ரிடி வீசிய பந்தை பார்த்து விராட் கோலி கொடுத்த ரியாக்‌ஷன் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன.

இந்நிலையில், இன்று இலங்கையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதி வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில், முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி எதிர்கொண்டுள்ளன.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தொடக்கத்திலேயே சரியத் தொடங்கியது. கேப்டன் ரோகித் சர்மா 11 ரன்களிலும், விராட் கோலி 4 ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 14 ரன்களிலும், சுப்மன் கில் 32 பந்துகளில் 10 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

இந்நிலையில், ரோஹித் ஷர்மாவுக்கு ஷாஹீன் அஃப்ரிடி வீசிய பந்தை பார்த்து விராட் கோலி கொடுத்த ரியாக்‌ஷன் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

author avatar
Gayathri