என்ன ஆளுப்பா இவரு… பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இஷான் கிஷன் சாதனை!

0
59

என்ன ஆளுப்பா இவரு… பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இஷான் கிஷன் சாதனை!

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து 4வது அரைசதம் விளாசி இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் சாதனை படைத்துள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன.

இந்நிலையில், இன்று இலங்கையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதி வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில், முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி எதிர்கொண்டுள்ளன.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தொடக்கத்திலேயே சரியத் தொடங்கியது. கேப்டன் ரோகித் சர்மா 11 ரன்களிலும், விராட் கோலி 4 ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 14 ரன்களிலும், சுப்மன் கில் 32 பந்துகளில் 10 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

இதனால், இந்திய அணி 66 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டிருந்தது. அப்போது, வீரர் இஷான் கிஷன் பேட்டிங் செய்ய களமிறங்கினார். இவரும் ஆட்டமிழந்துவிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், ஹாரிஸ் ராஃப் பந்துவீச்சில் சிக்சர் அடித்து தூள் கிளப்பினார். இவருடைய ஆட்டத்தைப் பார்த்து அரங்கத்தில் இருந்த ரசிகர்கள் மிரப்பில் ஆழ்ந்தனர்.

இவரும், ஹர்திக் பாண்டியாவும் நம்பிக்கையோடு விளையாடியதில் இந்திய அணியின் ரன் 20 ஓவர்கள் முடிவில் 100 ரன்களை கடந்தது. இரண்டு பேரும் விக்கெட் இழக்காமல் சிறப்பான ஆட்டத்தை விளையாடியதைப் பார்த்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ஷாகின் அப்ரிடியை களத்தில் இறக்கினார. அப்போது, ஹர்ரித் பாண்டிய அவருடைய பந்தில் பவுண்டரி அடித்தார்.

கொஞ்சமும் அசராத இஷான் கிஷன், சிறப்பாக விளையாடி 54 பந்துகளில் அரைசதம் விளாசினார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகளில் விளையாடி இஷான் கிஷன் 3 அரைசதம் விளாசினார். தற்போது இந்தப் போட்டியிலும் மீண்டும் அரைசதம் விளாசி தனது 4வது அரைசதத்தை பதிய வைத்து சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் இனி கிரிக்கெட் தொடரில் இஷான் கிஷன் தவிர்க்க முடியாத வீரராக வளர்ந்து விட்டார் என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.

author avatar
Gayathri