இவர் திருந்தவே மாட்டாரு.. மீண்டும் மீண்டும் ஒரே தவறு!! 9 முறை ஒரே பாணியில் ஆட்டமிழந்த விராட்!!

Photo of author

By Vijay

cricket: இந்திய அணியின் முக்கிய வீரர் விராட் கோலி மீண்டும் மீண்டும் ஒரே தவறை செய்து விக்கெட் இழந்து வருகிறார்.

இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேன் விராட் கோலி சமீப காலமாக அவர் பேட்டிங்கில் சரியான பார்மில் இல்லை . இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி இதுவரை விளையாடி 4 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது.

நேற்று தொடங்கிய இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணி இடையிலான டெஸ்ட் போட்டியானது இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்சில் விராட் கோலி 17 ரன்களில் ஆட்டமிழந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அவுட் சைடு ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசப்படும் பந்தில் விக்கெட் விடுவதை வாடிக்கையாக்கி வருகிறார்.

இதுவரை விராட் கோலி இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான தொடரில் விளையாடிய 5 போட்டிகளில் 9 இன்னிங்ஸில் விளையாடியுள்ளார். இதில் 9 முறையும் அவுட் சைடு ஆஃப் ஸ்டம்பிற்கு ஆட்டம் இழந்துள்ளார். ஒரு முறை அல்லாமல் 9 முறையும் ஒரே தவறை செய்து தனது விக்கெட்டை இழந்துள்ளார் விராட் இதனால் இந்திய ரசிகர்கள் தயவு செய்து ஓய்வு பெறுங்கள் என மீண்டும் குரல் எழுப்ப தொடங்கியுள்ளன.