கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! கலகலப்பிற்கு குறைவில்லாத நாள்!

0
178
Virgo – Today's Horoscope!! The day when the confusion from the mind decreases!
Virgo – Today's Horoscope!! The day when the confusion from the mind decreases!

கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! கலகலப்பிற்கு குறைவில்லாத நாள்!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கலகலப்பிற்கு குறைவில்லாத நாள். நிதி அனுகூலமாக உள்ளது. கணவன் மனைவி அன்யூனியம் சிறப்பாக உள்ளது.

உத்தியோகத்தில் சிறப்பான சூழ்நிலை அமையும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் சில அதிரடியான நுணுக்கங்களை திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள் அது உங்களுக்கு நன்மையில் முடிவடையும். கொடுக்கல் வாங்கல்கள் மிக சிறப்பான பாதையில் செல்வதால் புதிய முதலீடுகளை துணிந்து செய்து வெற்றி அடைவீர்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வருமான வாய்ப்புகள் வந்து சேரலாம். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் தொலைபேசி மூலம் சில நன்மைகளை செய்வார்கள்.

அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பார்கள். கலைத்துறை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் கண்டிப்பாக கிடைக்கும். மூத்த வயது சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக நடைப்பயில்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் அற்புதமான நாளாக உங்களுக்கு அமையும்.

Previous articleசிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! ஆலய வழிபாட்டினால் அமைதி காண வேண்டிய நாள்!
Next articleதுலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! ஆற்றல் அதிகரிக்கும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here