துலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! ஆற்றல் அதிகரிக்கும் நாள்!

0
69
Libra – Today's Horoscope!! A day to act with caution!
Libra – Today's Horoscope!! A day to act with caution!

துலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! ஆற்றல் அதிகரிக்கும் நாள்!

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாள். எடுத்த காரியங்களில் எல்லாம் அருமையாக வெற்றி பெறுவீர்கள். நிதி செலவு ஏற்றவாறு வரவு வந்து சேரும்.

கணவன் மனைவியிடையே அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மீது பாச மழை பொழிவார்கள். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் முன்னேற்றம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்கள் ஆற்றல் தெரிய வரும். கொடுக்கல் வாங்கல்கள் மிகச் சிறப்பான பாதையில் செல்லும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு அலுவலகத்தில் தனி மரியாதை கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்களுக்கு பொறுப்புணர்வுகள் அதிகரிக்கும்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில நன்மைகள் உண்டாகும். அரசியல்வாதிகள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். மூத்த வயது சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு அற்புதமான நாளாக அமையும்.

author avatar
CineDesk