கன்னி -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உற்சாகத்துடன் செயல்படும் நாள்!!

Photo of author

By Selvarani

கன்னி -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உற்சாகத்துடன் செயல்படும் நாள்!!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உற்சாகத்துடன் செயல்படும் நாள். களத்திர ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் மிகவும் குதூகலமான நாளாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு பாச மழை பொழிவார்கள். கணவன் மனைவி இடையே அதி அற்புதமான அன்யூனியம் நிலவும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். யோகத்தில் உங்களது நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும். அரசியல் இருக்கும் நண்பர்கள் புதுமனை புது வீடு வாங்கி மகிழ்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு குதூகலமான செய்தி ஒன்று வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனை அன்பை பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்த படுத்தும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். மூத்த வயது சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி சந்தோசமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு உற்சாகம் தரும் செய்தி ஒன்று வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.