கன்னி ராசி இன்றைய ராசிபலன்!!சந்தோஷம் அதிகரிக்கும் நாள்!!

0
77
Virgo – Today's Horoscope!! The day when the confusion from the mind decreases!
Virgo – Today's Horoscope!! The day when the confusion from the mind decreases!

கன்னி ராசி இன்றைய ராசிபலன்!!சந்தோஷம் அதிகரிக்கும் நாள்!!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சந்தோஷம் அதிகரிக்கும் நாள். தனவாக்கு குடும்பஸ்தானத்தில் சந்திரன் பலமாக இருப்பதால் இன்றைக்கு சந்தோஷத்திற்கு குறைவில்லாமல் இருப்பீர்கள். நிதி அற்புதமாக உள்ளது. அதனை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்புகள் சிலருக்கு உண்டாகும்.

கணவன் மனைவியுடைய ஆதாரமான அன்யூனியம் நிலவும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் சலுகைகளை பெறுவீர்கள். தொழில் வியாபாரம் அருமையான பாதையில் செல்லும். நீங்கள் கேட்டிருந்த கடன் உதவிகள் இன்று கைக்கு வந்து சேரலாம்.

கொடுக்கல் வாங்கல்கள் அருமையான பாதையில் செல்வதால் புதிய முதலீடுகளை இன்றைய தினம் புகுத்தலாம். உத்தியோகத்தில் பெண்களுக்கு சந்தோஷமான செய்தி காத்திருக்கிறது. குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வார்கள்.

நண்பர்கள் உறவினர்களுடன் பிறந்த சகோதர சகோதரிகளின் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். அரசியல்வாதிகள் முன்னேற்றம் அடைவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிற ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக நல்லதே நடக்கும்.

author avatar
CineDesk