நெஞ்சு சளி ஒரே நாளில் கரைய வேண்டுமா? ஒரு டம்ளர் குடித்தால் போதும்!

0
161

நெஞ்சு சளி ஒரே நாளில் கரைய வேண்டுமா? ஒரு டம்ளர் குடித்தால் போதும்!

தற்போது மழை காலமும் குளிர்காலமும் சேர்ந்து வருவதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சளி, இரும்பல், தொண்டை புண், சுவாசக் கோளாறு போன்றவைகள் ஏற்படும். இந்த சமயங்களில் நோய் எதிர்ப்பு சக்திகள் குறையவும் வாய்ப்பு உள்ளது.

மேலும் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கும் தொற்று வைரஸ் பாதிப்பு ஏற்படும். மேலும் ஒரு சிலருக்கு அதிகளவு நெஞ்சு சளி ஏற்பட்டு அதனால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகின்றது. அதனை சரி செய்ய என்ன செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.

தேவையான பொருட்கள்:

வெற்றிலை, இஞ்சி, மிளகு, கொத்தமல்லி தூள், சீரகம்.

ஒரு பாத்திரத்தில் ஒரு ஒன்றரை டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதில் ஒரு வெற்றிலையை நான்கு ஐந்து துண்டுகளாக கிள்ளி சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் தோல் நீக்கி இஞ்சி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கால் டீஸ்பூன் அளவிற்கு மிளகு சேர்க்க வேண்டும். மேலும் அதனுடன் கால் டீஸ்பூன் அளவிற்கு சீரகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் அரை டீஸ்பூன் அளவிற்கு கொத்தமல்லி பொடி சேர்க்க வேண்டும்.

ஒன்றரை டம்ளர் தண்ணீர் முக்கால் டம்ளர் வரும் வரை நன்கு கொதித்த பிறகு அதனை வடிகட்டி கொள்ள வேண்டும். இதனை குடித்தால் நெஞ்சில் கட்டி உள்ள சளிகள் அனைத்தும் கரைந்து சளி தொல்லையில் இருந்து நீங்கள் விடுபடலாம்.

 

author avatar
Parthipan K