விருத்தாச்சலம் | ரயிலில் தவறி விழுந்த கர்ப்பிணி பெண் பலி! அதிரவைக்கும் பகிர் பின்னணி

0
377
RailwayStation Train PregnantLady
RailwayStation Train PregnantLady

விருத்தாச்சலம் அருகே கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திரிசூலம் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமாரின் மனைவி கஸ்தூரி (21 வயது). கர்ப்பிணியான கஸ்தூரி தனது கணவர் மற்றும் உறவினர்கள் 11 பேருடன் சொந்த ஊரான சங்கரன் கோவிலுக்கு சென்னையில் இருந்து கொல்லம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று இரவு புறப்பட்டுள்ளார்.

திடீரென ரயில் பயணத்தின் போது கஸ்தூரிக்கு வாந்தி வந்ததால் ரயிலின் கதவு ஓரத்தில் நின்று வாந்தி எடுக்க முற்பட்டுள்ளார். அப்போது கால் இடறி ரயிலிலிருந்து கீழே விழுந்துள்ளார்.

உடனடியாக கணவர் மற்றும் உறுப்பினர்கள் ரயிலின் அபாய சங்கலியை இழுத்து உள்ளனர். ஆனால் அந்த அபாய சங்கிலி வேலை செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது.

சுமார் எட்டு கிலோமீட்டர் தூரம் ரயில் சென்று நின்றுள்ளது. இதனை தொடர்ந்து உறவினர்கள் கர்ப்பிணி பெண்ணின் உடலை தேடி அலைந்து உள்ளனர். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை.

சுமார் 3 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் விருதாச்சலம் அருகே அவரின் உடல் மீட்கப்பட்டு, விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது.

உயிரிழந்த கஸ்தூரிக்கு நாளை மறுநாள் சங்கரன்கோவிலில் வளைகாப்பு நடைபெற இருந்த நிலையில், அதற்காக சொந்த ஊருக்கு சென்றபோது, ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ரயில் ரயிலில் அபாய சங்கலி சரிவர செயல்பட்டிருந்தால் கர்ப்பிணி பெண்ணின் உயிரை காப்பாற்றி இருக்கலாம் என்று உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எது எப்படி ஆனாலும் ரயில் பயணத்தின் போது படிக்கட்டின் ஓரம் நின்று பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது. வாந்தி எடுக்கும் சூழ்நிலை வந்தால் பிளாஸ்டிக் கவர்களை கையோடு பயணத்தின் போது எடுத்து செல்வது உகந்தது.

பாதுகாப்பான பயணத்தை அனைவரும் மேற்கொள்வோம். உயிர் இழப்பை தவிர்ப்போம்.

Previous article#BigBreaking | தொகுதி மாறிய ராகுல் காந்தி! காலையிலேயே அதிர்ச்சி கொடுத்த காங்கிரஸ் கட்சி!
Next articleஎதெற்கெடுத்தாலும் கோபம் வருதா?! உங்க இதயத்திற்கு ஆப்பு! ஆய்வறிக்கை சொல்லும் அதிர்ச்சி செய்தி!