விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து! 2 பேர் பலி!!

Photo of author

By Parthipan K

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து! 2 பேர் பலி!!

Parthipan K

Updated on:

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து! 2 பேர் பலி!!

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் படுகாயமடைந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விருதுநகர் அருகே கோட்டநத்தம் கிராமத்தில் கோட்டைப்பட்டியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த கட்டநாயக்கன்பட்டியை சேர்ந்த கருப்பசாமி (60), டி.சேடப்பட்டியை சேர்ந்த முத்துபாண்டி (40) ஆகிய 2 தொழிலாளர்களும் பலத்த காயம் அடைந்தனர். 

அவர்கள் இருவருக்கும் உடல் முழுவதும் தீ பற்றி 80 சதவீத தீக்காயம் ஏற்பட்டது. தீக்காயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலையில் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.