Breaking News, District News, News, State

விருதுநகர் சப்-இன்ஸ்பெக்டர், பெண் போலீஸ்க்கு பாலியல் தொல்லை!! அதிரும் காவல் வட்டரங்கள்!!

Photo of author

By Vinoth

விருதுநகர் மாவட்டம்:  ராஜபாளையம் பகுதியில் அமைந்துள்ள தொம்பக்குளம் கிராமத்தை சேர்ந்த சுமார் 55 வயது உடைய மோகன்ராஜ். இராஜபாளையம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணியாற்றி வருகிறார். அவர் தற்போது ராஜபாளையம் மலையடிப்பட்டி உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். ஆனால் மோகன்ராஜி பணியில் இருக்கும் போது அதிக அளவில் மது அருந்துவது வழக்கமாக கொண்டுள்ளார்.

அவர் மது அருந்தி வந்தால் காவல் நிலையத்தில் ரகளை செய்வது வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த பெண் போலீசிடம் மது அருந்திவிட்டு தகாத முறையில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதனையாடுத்து இந்த பெண் காவலர் மோகன்ராஜ் மீது புகார் மனு அளித்தார். அதன் பின்பு விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் கண்ணனுக்கு தகவல் கொடுக்கபட்டது.

இந்த சம்பவத்தை விசாரணை நடப்பதற்கு முன்பு மோகன்ராஜ் ஆயுதப்படைக்கு பணியை மாற்றி உத்தரவு போடப்பட்டது. மேலும் அவர் மீது விசாரணை நடத்து பட்டு வருகிறது. இந்த சம்பவம் உண்மை என தெரியவந்தால் அவர் மீது கடுமையாக சட்டம் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறனார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலக செஸ் சாம்பியன்ஷிப் வென்ற  குகேஷ்!! சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்!!

சைபர் குற்றங்களுக்கு எதிராக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு!!