என்ஜினீயரிங் பட்டதாரி திடீர் மரணம்?..மனஅமைதி இல்லாத காரணத்தினால் தற்கொலையா?

0
243
Sudden death of engineering graduate?..suicide due to lack of peace of mind?
Sudden death of engineering graduate?..suicide due to lack of peace of mind?

என்ஜினீயரிங் பட்டதாரி திடீர் மரணம்?..மனஅமைதி இல்லாத காரணத்தினால் தற்கொலையா?

பாளை பெருமாள்புரம் பாரதி நகரை சேர்ந்தவர் தான்  அரவிந்தன். இவரது மனைவி காயத்ரி இவருடைய வயது 37. இவர்கள் இருவருமே என்ஜினீயரிங் பட்டதாரிகள்.இவர்கள் இரண்டு  பேரும் கடந்த பன்னிரண்டு  ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு 9 வயதில் ஒரு சிறுவன் உள்ளான்.இந்நிலையில் அரவிந்தன் குடும்பத்துடன் வெளிநாட்டில் வசித்துவந்தார்.அங்கு பணிபுரியும் நிறுவனத்தில்  சமீபத்தில் விடுமுறை என்பதால்  சொந்த ஊரான பெருமாள்புரத்துக்கு வந்திருந்தார்.

அப்போது அவருடன் மனைவி மற்றும் மகனும் வந்தார்கள்.திடிரென்று காயத்ரி கடந்த சில நாட்களாகவே மன அமைதி இல்லாமல் குழப்பத்தில் இருந்து வந்ததாக தெரியவந்தது. இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரமாக பார்த்து அவர் விஷம் குடித்து மயங்கி கீழே விழுந்து கிடந்தார்.

இதனை கண்ட அவரது உறவினர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு  மருத்துவமனையில்  சிகிச்சைக்காக சேர்த்தனர்.இந்நிலையில் அவர்  சிகிச்சை பலனின்றி இன்று காலை காயத்ரி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுதொடர்பாக பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காயத்ரியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதனால் அப்பகுதில் பெரும் சோகத்தை  ஏற்படுத்தி வருகிறது.

Previous article“சின்னப் பசங்க போய் கிரிக்கெட் விளையாட வேண்டும்…” பண்ட்டுக்கு பதிலடி கொடுக்கும் நடிகை
Next articleநெகட்டிவ் விமர்சனங்களால் பாதிக்கப்பட்டதா விருமன் வசூல்? முதல் நாள் கலெக்‌ஷன் எவ்வளவு?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here