விஷாலின் அரசியல் பயணம் ஆரம்பம்!! விரைவில் அறிவிப்பு!!

Photo of author

By Gayathri

விஷாலின் அரசியல் பயணம் ஆரம்பம்!! விரைவில் அறிவிப்பு!!

Gayathri

Vishal's political journey begins!! Notification coming soon!!

சமீபத்தில் விஜய் அரசியல் களம் காணப் போவதாக அறிவிப்பை வெளியிட்டு அதன் பின் தனக்கென்று தனி கட்சியினைத் துவங்கி வெற்றிகரமாக அடுத்த கட்ட நடவடிக்கைக்கு சென்று கொண்டிருக்கிறார். அவரை தொடர்ந்து தற்சமயம் நடிகர் விஷாலும் தனது அரசியல் வாழ்க்கை குறித்து வெளியிடப் போவதாக செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். இவர் வெளியிட்ட செய்தி தற்பொழுது பரபரப்பாக பரவி வருகின்றது.

மதகஜராஜா பட ப்ரமோஷன் நிகழ்ச்சியில் உடல் நலிவுற்று வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். அதன் பின்னர் சமூக பிரச்சனைகளை எதிர்த்து குரல் கொடுத்து வந்துள்ளார். இன்று காலை அவர் சென்னை பாரி முனையில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் ஏழைப் பெண் குழந்தைகளின் படிப்பு வசதிக்காக காளிகாம்பாள் அம்மனிடம் பிரார்த்தனை செய்து கொண்டுள்ளார். அதனை தொடர்ந்து தனது அரசியல் பயணம் குறித்து இந்த வருட நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் வெளியிடுவதாக கூறியுள்ளார். விஜயைத் தொடர்ந்து இவரும் அரசியல் களம் காணப்போகிறார் என்று பரவி வந்த சமூக வலைத்தள செய்தி இதன் மூலம் உண்மையாயிற்று.