ட்ரண்டாகும் நடிகர்களின் நிர்வாண போஸ்… ரண்வீரை தொடர்ந்து பிரபல தமிழ் நடிகர் வெளியிட்ட புகைப்படம்

Photo of author

By Vinoth

ட்ரண்டாகும் நடிகர்களின் நிர்வாண போஸ்… ரண்வீரை தொடர்ந்து பிரபல தமிழ் நடிகர் வெளியிட்ட புகைப்படம்

நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய அரை நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது.

நடிகர் ரன்வீர் சிங் தனது சமீபத்தில் பத்திரிகையின் முகப்பட்டை புகைப்படத்துக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ஒட்டுமொத்த இந்திய திரையுலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த நிர்வாண போஸ் சம்மந்தமாக பேப்பர் இதழில் ரண்வீரின் நேர்காணல் வெளியாகியுள்ளது. அதில் “உடல் ரீதியாக நிர்வாணமாக இருப்பது எனக்கு மிகவும் எளிதானது, எனது சில நிகழ்ச்சிகளில் நான் நிர்வாணமாக இருந்துள்ளேன். என் ஆன்மாவை நீங்கள் பார்க்கலாம். அது எவ்வளவு நிர்வாணமானது? அது உண்மையில் நிர்வாணமாக இருக்கிறது. ஆயிரம் பேருக்கு முன்னால் நான் நிர்வாணமாக இருக்க முடியும்,”என்று அவர் பேட்டியில் கூறினார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின. அதைத் தொடர்ந்து  விமர்சனங்கள் கூட சமூகவலைதளங்களில் எழுந்தன. இந்நிலையில் இப்போது ரண்வீர் சிங்கைத் தொடர்ந்து தானும் இந்த ட்ரண்டில் இணைவதாக பிரபல தமிழ் நடிகர் விஷ்ணு விஷால் அறிவித்து தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.