“ஹர்திக் பாண்ட்யா விரைவில் ஓய்வா?…” முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பரபரப்பு கருத்து

0
73

“ஹர்திக் பாண்ட்யா விரைவில் ஓய்வா?…” முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பரபரப்பு கருத்து

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா 2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவார் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தற்போது மீண்டும் தன்னுடைய பழைய ஃபார்மை மீட்டெடுத்துள்ளார். பேட்டிங் & பவுலிங் என இரண்டிலு கலக்கி வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அவர் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் ஆனது. அதைத் தொடர்ந்து இந்திய அணிக்கும் சில போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு வெற்றிகளை ஈட்டித்தந்துள்ளார்.

இந்நிலையில் அவர் 2023 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பைக்குப் பிறகு ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவார் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். மேலும் அவர் “இப்போது விளையாடும் வீரர்கள் தாங்கள் எந்த போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற முடிவோடு வருகிறார்கள். பாண்ட்யா 20 ஓவர் போட்டிகளில் விளையாட கவனம் செலுத்துகிறார். 2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பை வருவதால் ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறார். அதன் பிறகு ஒரு நாள் தொடரில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவார்.” என்று கூறி அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளார்.

சமீபத்தில் அதிக போட்டிகளில் விளையாட முடியவில்லை என்று கூறி பென் ஸ்டோக்ஸ் ஓய்வு பெற்றது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.