சமூக வலைதளத்தை கலக்கிய விஸ்வாசம் ! அஜீத் ரசிகர்கள் உற்சாகம்

0
205

கடந்த 2019ம் ஆண்டு அஜீத் நடித்து பொங்கல் ரிலீஸாக வெளியானது விஸ்வாசம் திரைப்படம். இந்த படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வசூல் சாதனை புரிந்தது.

விஸ்வாசம் திரைப்படம் நடிகர் அஜீத் மற்றும் இயக்குனர் சிவாவிற்கும் நல்ல பெயரை வாங்கித் தந்தது. இத்திரைப்படம் அஜீத் நடித்த படங்களில் குறிப்பிடத்தக்கது என்று சினிமா விமர்சகர்கள் கூறிவந்தனர்.

இந்த நிலையில் டுவிட்டர் நிறுவனம் அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ‘உலகிலேயே டுவிட்டரில் 2019ம் ஆண்டு அதிகம் இடம் பெற்ற வார்த்தை விஸ்வாசம் தான் என டுவிட்டர் நிறுவனம் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது’.

இதனை திரைத்துறையினர் தங்களது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

Previous articleகொரோனா வைரஸை விட வேகமாக பரவும் வியாதி : அமைச்சர் ஆதங்கம்!
Next articleசென்னை மாநகரப் பேருந்துகள் நேரத்தை அறிய ‘சலோ’ செயலி