உடல் செயல்பாட்டிற்கு வைட்டமின் பி அவசியமான ஒன்றாகும்.இந்த ஊட்டச்சத்து குறைந்தால் உடலில் பல பாதிப்புகள் ஏற்படும்.
வைட்டமின் பி குறைபாட்டை உணர்த்தும் அறிகுறிகள்:
1)இரத்த சோகை
2)கடும் உடல் சோர்வு
3)உடல் பலவீன உணர்வு
4)வாய்ப்புண்
5)கை மற்றும் கால்களில் கூச்ச உணர்வு
6)சருமப் பிரச்சனை
7)ஞாபக மறதி
8)முகப்பரு
9)மலச்சிக்கல்
வைட்டமின் பி குறைபாட்டின் காரணங்கள்:
1)இரைப்பை குடல் அலர்ஜி
2)இரத்த சோகை
3)இரைப்பை பைபாஸ்
4)செரிமானப் பிரச்சனை
5)வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனை
வைட்டமின் பி உள்ள உணவுகள்:
**முட்டை
தினமும் ஒரு முட்டை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வைட்டமின் பி சத்து கிடைக்கும்.முட்டையை வேக வைத்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
**பால்
கால்சியம் சத்து நிறைந்த பாலில் வைட்டமின் பி நிறைந்து காணப்படுகிறது.தினமும் ஒரு கிளாஸ் பால் பருகுவதன் மூலம் வைட்டமின் பி சத்தை பெறலாம்.
**சிட்ரஸ் பழங்கள்
ஆரஞ்சு,எலுமிச்சை போன்ற பழங்களை ஜூஸாக பருகி வந்தால் வைட்டமின் பி சத்து கிடைக்கும்.
**உலர் விதைகள்
சூரியகாந்தி விதையை வறுத்து சாப்பிட்டு வந்தால் வைட்டமின் பி சத்து கிடைக்கும்.அதேபோல் பச்சை இலை காய்கறிகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் வைட்டமின் பி சத்து கிடைக்கும்.
**சால்மன் மீன்
மீன்கள் அனைத்தும் உடலுக்கு நன்மை தருகிறது.இருப்பினும் சால்மன் மீனை உட்கொள்வதன் மூலம் வைட்டமின் பி குறைபாட்டை போக்கலாம்.
**சிவப்பு இறைச்சி
அசைவப் பிரியர்கள் வைட்டமின் பி குறைபாட்டை போக்க சிவப்பு இறைச்சியை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
**பழுப்பு அரிசி
வெள்ளை அரிசிக்கு மாற்று பழுப்பு அரிசியை சாப்பிட்டு வந்தால் வைட்டமின்பி சத்து உடலில் அதிகரிக்கும்.
**அவகோடா
வெண்ணெய் பழம் என்று அழைக்கப்படும் அவகோடாவை சாப்பிடுவதன் மூலம் போதிய வைட்டமின் பி சத்தை பெறலாம்.