நமது உடல் ஆரோக்கியத்திற்கு வைட்டமின்கள் அவசியமான ஒன்றாகும்.குறிப்பாக வைட்டமின் பி 12 என்பது உடல் உறுப்புகளின் செயல்பாடுகளுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்தாகும்.நமது மூளை நரம்புகள் சீராக செயல்பட வைட்டமின் பி 12 அவசியம் தேவைப்படுகிறது.
உடல் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.எலும்பு முறிவு பிரச்சனையை சரி செய்கிறது.மனசோர்வு இருப்பவர்களுக்கு வைட்டமின் பி 12 அவசியமானவையாகும்.இந்த வைட்டமின் பி 12 நமது உடலில் நாளொன்றுக்கு 2.4 மைக்ரோகிராம் அளவு இருக்க வேண்டும்.இந்த வைட்டமின் நம் உடலில் உருவாகாது.நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகள் மூலமே இவை நமக்கு கிடக்கிறது.
3 வயது முதல் 20 வயது வரை உள்ளவர்களில் 39% பேர் இந்த வைட்டமின் பி 12 குறைபாட்டை சந்திக்கின்றனர்.
அடுத்து 20 முதல் 40 வயது வரை உடையவர்களில் 59% பேர் இந்த வைட்டமின் பி 12 குறைபாட்டை எதிர் கொள்கின்றனர்.
வைட்டமின் பி 12 குறைபாடு அறிகுறிகள்:
1)செரிமானப் பிரச்சனை
2)நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனை
3)கடுமையான உடல் சோர்வு
4)தோலின் நிறத்தில் மாற்றம்
5)கை,கால் உணர்வின்மை
6)நாக்கில் வீக்கம் மற்றும் வலி ஏற்படுதல்
7)மனம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும்
8)குமட்டல் மற்றும் வாந்தி உணர்வு
9)உடல் எடை இழப்பு
10)பார்வை பிரச்சனை அதிகரித்தல்
வைட்டமின் பி 12 குறைபாட்டிற்கான காரணங்கள்:
**வயிற்றுப்புண் பாதிப்பு
**இரைப்பை குடல் அலர்ஜி
**இரத்த சோகை
**எடை குறைப்பு சிகிச்சை
**செரிமானம் தொடர்பான பாதிப்புகள்
வைட்டமின் பி 12 வேலைகள்:
**உடலில் இரத்த சிவப்பணுக்களை உருவாக்குதல்
**எலும்பு வலிமையை அதிகரித்தல்
**மன இறுக்கத்தை கட்டுப்படுத்துதல்
**இதய ஆரோக்கியத்தை பாதுகாத்தல்
**இரத்த சோகை பாதிப்பை சரி செய்தல்
வைட்டமின் பி 12 குறைபாட்டை தடுக்கும் உணவுகள்:
பசும் பால்,ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த மீன்கள்,சிவப்பு இறைச்சி,நாட்டுக்கோழி முட்டை போன்ற உணவுகள் மூலம் வைட்டமின் பி 12 குறைபாட்டை தடுக்கலாம்.
தயிர் மற்றும் பால் சார்ந்த பொருட்களை உட்கொள்வதால் வைட்டமின் பி 12 குறைபாடு தடுக்கப்படும்.பாதாம் பருப்பு,சோயா,ஈஸ்ட் போன்ற உணவுப் பொருட்களை உட்கொள்வதன் மூலம் வைட்டமின் பி 12 குறைபாட்டை தடுக்கலாம்.