நாமக்கல் மாவட்டத்தில் விவேகானந்தா கல்லூரி பேருந்து விபத்து! மாணவிகள் படுகாயம்!

Photo of author

By Parthipan K

நாமக்கல் மாவட்டத்தில் விவேகானந்தா கல்லூரி பேருந்து விபத்து! மாணவிகள் படுகாயம்!

அனைத்து மாணவர்களும் தனியார் கல்லூரியில் படித்தால் பாதுகாப்பாக கல்லூரி பேருந்து பேருந்தில் சென்று வரலாம் என்று எண்ணி அனைவரும் தனியார் கல்லூரிகளை நாடிச் செல்கின்றார்கள். ஆனால் ஒரு சில பேருந்து ஓட்டுநர்கள் கவன குறைவின் காரணமாக. பெருந்தை சரியாக இயக்குவதில்லை. அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்து இளையம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவிகள் பயின்று வருகின்றனர்.

அதன் காரணமாக அனைத்து ஊர்களுக்கும் பேருந்து அனுப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று காலை கரூரிலிருந்து இருந்து  கல்லூரி மாணவிகளை ஏற்றிகொன்டு திருச்சங்கோடு  நோக்கி மதுரை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது ஆண்டாள் பாளையத்தில் அந்தப் பேருந்தானது அதிக வேகத்துடன் வந்த காரணத்தால் முன்னாள் சென்ற லாரியின் மீது மோதியது.

மேலும் இந்த விபத்தில் கல்லூரி மாணவிகள் ஆறு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அக்கபக்கதினர்   அந்த மாணவிகளை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தானது கல்லூரி பேருந்து இயக்கிய ஓட்டுநரை கவனக்குறைவால் மட்டுமே நடந்தது எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.