பட்டதாரிகளுக்கு உதவி தொகையுடன் வழங்கப்படும் தொழில் பயிற்சி!! தமிழக அரசு அறிவிப்பு!!

Photo of author

By Gayathri

இன்ஜினியரிங், பிஎஸ்சி மற்றும் டிப்ளமோ படித்த மாணவர்களுக்கு மாதாந்திர உதவி தொகையுடன் ஓராண்டு கால தொழில் பழகுநர் பயிற்சியும் தமிழக அரசு வழங்க உள்ளது.

மேலும் இந்த பயிற்சியானது, தமிழக அரசின் பொதுப்பணித் துறை, மத்திய தொழில் பழகுநர் பயிற்சி வாரியத்தின் தென்மண்டல அலுவலகத்துடன் இணைந்து வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சியில் சேர தமிழகத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரிகள் (சிவில், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், ஆர்க்கிடெக்சர்), பிஏ, பிஎஸ்சி, பிகாம், பிபிஏ, பிபிஎம், பிசிஏ உள்ளிட்ட கலை அறிவியல் பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள் சேரலாம் என்று அரசு தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

இதற்கான தகுதிகளாக அரசு தரப்பில் கூறப்பட்டிருப்பது :-

✓ 2020 முதல் 2024 வரையில் படித்த மாணவர்கள் திட்டத்தின் கீழ் பயன்பட விண்ணப்பிக்கலாம்.

✓ மேலும், மேற்கண்ட தகுதியுடைய பட்டதாரிகள் டிச.31-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

இது குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்வதற்கு www.boat-srp.com என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.