World

வெடித்து சிதறிய எரிமலையிலேயே ஆம்லெட் போட்ட கில்லாடி..!

ஐஸ்லாந்தில் வெடித்து சிதறிய எரிமலையின் நெருப்பு குழம்பில் பேன்(pan) வைத்து ஒருவர் ஆம்லெட் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

ஐஸ்லாந்து நாட்டின் தலைநகர் ரெய்காவிக்கில் ஃபக்ரடால்ஸ்ஜல் என்ற எரிமலை உள்ளது. இந்த பகுதியில் அடிக்கடி ஏற்படும் நில அதிர்வுக்காரணமாக கிட்டத்தட்ட 600 ஆண்டுகளுக்கு மேலாக ஃபக்ரடால்ஸ்ஜல் எரிமலை உறங்கிக் கொண்டே இருந்தது.

இந்த நிலையில் நீண்ட நாட்களாக உறங்கிக் கொண்டிருந்த எரிமலை திடீரென வெடிக்க தொடங்கியது. எரிமலை வெடிக்க தொடங்கியதும் அதிலிருந்து வெளியேறிய லாவா குழம்பு ஆறுப்போல் ஓடி பார்ப்போரை பிரமிப்பில் ஆழ்த்தியது.

நூற்றாண்டுகளை கடந்து வெடித்து சிதறியதில் பெருக்கெடுத்து வழியும் லாவாக்குழம்பை பார்க்க சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மக்கள் படையெடுத்தனர். அவ்வாறு லாவாக்குழம்பை பார்க்க சென்ற நபர் ஒருவர் தனது செயலால் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதாவது எரிமலை தீக்குழம்பில் அந்த நபர் சமைத்துள்ளார். கேட்டாலே நம்ப முடியவில்லை அல்லவா..?

https://twitter.com/mockchopped/status/1373912391080144897

அனல் பறக்கும் தீக்குழம்பு வழிந்தோடிட எடிமலை அருகே சென்ற அந்த நபர் நெருப்புக்குழம்பின் மீது பேன்(pan) வைத்து அதில் முட்டை ஒன்றை உடைத்து ஊற்றுகிறார். இதேபோல வேறு சிலரும் எரிமலைக்குழம்பில் ஆபத்தை உணராமல் உணவு சமைக்க ஆர்வம் காட்டினர்.

எரிமலையிலேயே உணவு சமைக்கும் அந்த நபர் இணையத்தில் வைரலாகி வருகிறார்.

Leave a Comment